பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் டிப்ளமோ படிதத் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். - kalviseithi

Aug 10, 2020

பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் டிப்ளமோ படிதத் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் டிப்ளமோ படிதத் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தொழில் நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,. தமிழகத்தில் இயங்கி வரும் 9 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகள் நடத்தப்படுகிறது. இதில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.. இந்த வகை படிப்புகளில் சேர டிப்ளமோ படித்தவர்கள் மட்டும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் இணைய தளத்தின் மூலம் செலுத்தலாம். இணைய தளம் மூலம் பதிவுக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள், செயலாளர், பகுதி நேர பிஇ, பிடெக் சேர்க்கை, கோயம்புத்தூர் என்ற பெயரில் 10ம் தேதியில் இருந்து பெற்ற டிடி பெற்று பொறியியல் சேர்க்கை மையங்கள் மூலமாக செலுத்தலாம்.

இணையதள வசதி இல்லாதவர்கள், விண்ணப்பம், டிடி ஆகியவற்றை சேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளுக்கான சேர்க்கை இந்த ஆண்டு ஆன்லைன் கவுன்சலிங் மூலம் நடத்தப்படும். இது குறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் மேற்கண்ட இணைய தளத்தை காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி