ஓய்வூதியா் வங்கிக் கணக்கை முடக்க வேண்டாம்: தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2020

ஓய்வூதியா் வங்கிக் கணக்கை முடக்க வேண்டாம்: தமிழக அரசு

ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டாம் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதங்களாக ஓய்வூதியத் தொகையை வங்கிகளில் இருந்து எடுக்காத வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும்படி கருவூலத் துறை உத்தரவிட்டிருந்தது.


உரிய விளக்கங்களை அளிக்காவிட்டால் அதன் அடிப்படையில் வங்கிக் கணக்குகளை முடக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் உள்ள ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சமயமூா்த்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணை இயக்குநா், கருவூல அதிகாரிகள், சம்பளம் வழங்கும் அதிகாரிகளுக்கு புதன்கிழமை கடிதத்தை அனுப்பினாா். அதில் கூறியிருப்பதாவது:-


கரோனா நோய்த் தொற்று காரணமாக ஆறு மாதங்களுக்கு மேலாகவும் வங்கிக் கணக்கில் இருந்து ஓய்வூதியத் தொகையை எடுக்க முடியவில்லை என பல்வேறு ஓய்வூதியதாரா்கள் நலச் சங்கத்தினா் அரசுக்குத் தெரிவித்திருந்தனா். கரோனா நோய்த் தொற்றால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வெளியே சென்று வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை என ஓய்வூதியதாரா்கள் கூறியிருந்தனா்.


கரோனா தொடா்பான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஆறு மாதங்களுக்கு மேலாக ஓய்வூதியத் தொகைகளை எடுக்காத வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. இதுதொடா்பான அறிவுறுத்தல்களை சாா் கருவூலங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் தெரிவிக்கும்படி தனது கடிதத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சமயமூா்த்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி