சீருடை பணியாளர் தேர்வு இறுதி கீ ஆன்சர் குளறுபடி - ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2020

சீருடை பணியாளர் தேர்வு இறுதி கீ ஆன்சர் குளறுபடி - ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு.


குமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் காலியாகவுள்ள எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஜன.12ல் எழுத்து தேர்வு நடந்தது. முதல் கட்டமாக வெளியான கீ ஆன்சர்படி எனக்கு 48.5 மதிப்பெண் கிடைத்தது. இதன்படி, பிசி பிரிவில் எனக்கு வேலை கிடைக்கும். இதனிடையே, கடந்த மார்ச்சில் வெளியான இறுதி கீ ஆன்சரில் வினா எண் 47க்கான விடை மாறியிருந்தது. இதன்படி, எனக்கு 48 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இதனால், எனக்கான வாய்ப்பு பறிபோனது.


வினா எண் 47ல், கடந்த 1947க்கு பிறகு இந்திய நாணயம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது என கேட்கப்பட்டது. இதற்கு 3 முறை என்பதே சரியான விடை. ஆனால், பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது 4வது முறை என்பதால், அதை சரியான விடை என குறிப்பிட்டு மதிப்பெண் வழங்கியுள்ளனர். பண மதிப்பு குறைப்பு என்பது வேறு, பண மதிப்பிழப்பு என்பது வேறு. கடந்த 2016ல் மேற்ெகாள்ளப்பட்ட பண மதிப்பிழப்பை, தவறுதலாக மதிப்பு குறைப்பு என கருதி 4 முறை என தவறான விடைக்கு மதிப்பெண் அளித்துள்ளனர். இதனால், 3 முறை என சரியாக பதிலளித்த பலருக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. எனவே, சரியான மதிப்பெண் அளித்த என்னை, அடுத்த 

கட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், ராஜ்குமார் என்பவரும் மனு செய்திருந்தார்.


இந்த மனுக்களை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பொருளாதார நிபுணர்கள் 4 முறை என்பதே சரியான விடை என கூறியுள்ளனர். மதிப்பு குறைப்பிற்கும், மதிப்பிழப்பிற்கும் வித்தியாசம் உள்ளது. மதிப்பு குறைப்பு என்பது இந்திய பணத்தின் மதிப்பு அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கும். அமெரிக்க டாலருக்கு ரூ.70 என்பது, மதிப்பு குறைப்பிற்கு பிறகு ரூ.80 என்ற அளவில் இருக்கும். இந்த முறையில் இதுவரை 3 முறை மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 2016ல் ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. இதன்மூலம் 99 சதவீத அளவிற்கான ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது. கருப்பு பணம், ஊழல், போலி நோட்டுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே மதிப்பிழப்பாகும். 


இதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 4 என்பதே சரியான விடை என்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான நிபுணர்களின் தவறான கருத்தாகும். இவர்கள் தான் மாணவர்களுக்கு பாடம் நடத்து கிறார்கள் என்பது துரதிஷ்டவசமானதாகும். நிபுணர்களின் தவறான கருத்து அடிப்படையில் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது. சரியான விடையளித்த பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டுள்ளது. தவறான விடையளித்த பலருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருக்கும். இதை சாதாரணமாக பார்க்க முடியாது. தேர்வு நடைமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.நிபுணர்களின் தவறான விடையால் பலருக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களே நிபுணர் குழுவில் இருக்க வேண்டும்.


தவறான விடைகளின் அடிப்படையில் வெளியான கீ ஆன்சர் தவறானது அல்லது செல்லாதது என அறிவிக்கப்படுகிறது. மனுதாரர்கள் இருவரும் சரியான விடையளித்துள் ளதால் அவர்களுக்கு 0.5 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதனடிப்படையில் இருவரும் அடுத்தகட்ட தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை 2 வாரத்தில் முடிக்க வேண்டும்.இனிவரும் காலங்களில் தேர்வாணையம் தகுதியான நிபுணர்களின் கருத்தை அறிய வேண்டும். ஒரே முறை மட்டுமின்றி, இரண்டாம் கட்டமாக நிபுணர்களின் கருத்தை அறியலாம் என உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. Nalla theerpu... welcome sir..

    ReplyDelete
  2. இது போன்ற அனைத்து போட்டி தேர்வுகளில் வினா தாள் தயாரிப்பவர்கள் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ph.d முடித்து தகுதி தேர்வு எழுத விலக்கும் பெற்ற போட்டி தேர்வு எழுதாமல் பணி நியமனம் பெற்ற பேராசிரியர்கள் தான். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் அல்ல. நீதிமன்றம் பேராசிரியர் தெரிவு முறையை மாற்ற வேண்டும். இல்லை என்றால் தப்பு தப்பான கேள்விகளும் பதில்களும் நீதி மன்றத்திற்கு வந்து எல்லோரும் எள்ளி நகையாடும் வகையில் தான் இருக்கும். உயர் கல்வியின் ஒழுங்கீன தன்மை மக்களுக்கு புரியவில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி