தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் ரிசல்ட் நிறுத்திவைப்பு: பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி - kalviseithi

Aug 18, 2020

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் ரிசல்ட் நிறுத்திவைப்பு: பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்றுள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பிஇ, பிடெக் படித்து வரும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் பருவத் தேர்வு அடிப்படையில் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் பல்கலைக் கழக இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்க முயன்றபோது, பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக (W.H.13) என்று வருகிறது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


இது குறித்து பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் தரப்பில் கூறப்படுவதாகவது: 

அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் பார்க்கும் போது பலருக்கு, கட்டணம் செலுத்தவில்லை என்று வருகிறது. அதாவது தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணத்தை செலுத்தவில்லை என்று பலர் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இணைப்பு பெற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணத்தை தனியார் கல்லூரிகள் வசூலித்துள்ளனர். ஆனால், அந்த கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அந்த கட்டணத்தை செலுத்தவில்லை. முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டுகளுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் ஒரு பாடத்துக்கு தலா ரூ.150 என கட்டணம் செலுத்தியுள்ளனர். 


அதன்படி 8 அல்லது 9 பாடங்களுக்கான தேர்வுக் கட்டணம் கொடுத்துவிட்டோம். இந்த கட்டணத்தை கணக்கிட்டால் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு வசூல் செய்த தனியார் கல்லூரிகள் அந்த பணத்தை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு செலுத்தாததால், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். அவர்கள் இந்த படிப்புகளில் சேரும் போது ஆண்டுக் கட்டணமாக மொத்தமாக சேர்த்து ரூ.14 ஆயிரம் என்று கட்டணம் செலுத்தியுள்ளனர்.


இதற்கிடையே, கட்டணம் தொடர்பான வழக்கில் முதலில் 40 சதவீத கட்டணத்தை வாங்க வேண்டும். பின்னர் தலா 30 சதவீதமாக வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தை காட்டி, தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்திவைத்துள்ளது. அதேபோல, தற்போது, பிஎச்டிபடிக்கும் மாணவர்களிடம் இருந்தும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகம் கேட்டு வருவதாகக ஆய்வு மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து உயர்கல்வித்துறை விசாரித்து உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அனைதது தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி