இப்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2020

இப்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை!

கொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என்று வெளியான செய்தியால், சூழ்நிலை சரியானதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் பள்ளிகள் மூடபட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவடைய உள்ள நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக 10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடக்க வேண்டிய தருணம் இதுதான். இதையடுத்து, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளை நவம்பர் மாதம் திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக செய்தி பரவியது. 

இதையடுத்து, தற்போது இருக்கிற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்து கேட்ட பிறகே சூழ்நிலையை பொறுத்து பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, சூழ்நிலை சரியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

4 comments:

  1. #ஆசிரியர்_தகுதித்தேர்வு_சான்றிதழ்_காலத்தை_ஆயுட்காலமாக்க_வேண்டும்.!

    #மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_MLA_அறிக்கை!

    2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 80,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணி நியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு ஆசிரியர் பணி நியமனம் கூட மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க செய்துவிடும்.

    மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பிகார், அரியானா போன்ற மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஏற்கனவே நீட்டித்தது போல தமிழக அரசும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை நீட்டித்து தர வேண்டும்.

    மேலும் ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில் அவர்களை பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அதிமுக அரசுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    அவர்களது நியாயமான நீண்டகால கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


    மு.தமிமுன் அன்சாரி MLA,
    #பொதுச்செயலாளர்,
    #மனிதநேய_ஜனநாயக_கட்சி


    நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    2013 ம் ஆண்டு ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று கடந்த ஏழாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவரா? நீங்கள்


    வாட்ஸ்அப் குழுவில் இணைய
    *What's app*:
    https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    ReplyDelete
  2. Thank you tamimun handari sir

    ReplyDelete
  3. Tet certificate validity ah extent pannalam

    ReplyDelete
  4. மனித நேய ஜனநாயகட்சிக்கு மகத்தான நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி