உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக பெறப்பட்ட CM CELL LETTER! - kalviseithi

Aug 23, 2020

உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக பெறப்பட்ட CM CELL LETTER!

கோரப்படும் தகவல்கள் :

1. M.SC. , மற்றும் M.PHIL . , கல்வித்தகுதியின் மூலம் பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் M.SC. , பட்டப்படிப்பிற்க்கு ஒரு உயர் கல்வி ஊக்க ஊதியம் பெற்றுள்ள நிலையில் M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்க்கு தகுதியுண்டா என்பதனையும் அதன் அரசாணை எண் மற்றும் அரசாணை நகலினை அனுப்பும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 


2. பார்வை 1. ல் கண்ட அரசாணையின் படி பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெற தடையாணை ஏதேனும் பெறப்பட்டுள்ளதா அதற்க்கான ஆணையின் நகலினை அனுப்பும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


 3. பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் பார்வை 1 ல் கண்ட அரசாணை வெளியிடுவதற்க்கு முன்பாக உயர் கல்வி முடித்த ஒருவர் தற்போது M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்க்கு தகுதியுண்டா என்பதனை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நான் கேட்கும் தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விதிவிலக்கு பிரிவு 6 ( 1 ) ன் கீழ் கோரவில்லை தமிழ் நாடு அரசின் அரசுப்பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் அரசாணை எண்.114 , நள் 02.03.2006 ன் கீழ் மேற்கண்ட தகவல்களை பொதுத் தகவல் அலுவலர் அவர்களே நேரடியாக எனக்கு அளிக்கும்படி மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


2 comments:

  1. தகவல் அறியும் உரிமை சட்டம் என்றே சாக்கடைக்கு சென்று விட்டது

    ReplyDelete
  2. தகவல் அறியும் உரிமை சட்டம் என்றே சாக்கடைக்கு சென்று விட்டது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி