EMIS இணையதளத்தில் மாணவர்களது விபரங்களை பொது தொகுப்பிற்கு ( common pool ) அனுப்புதல் மற்றும் அடுத்த உயர் வகுப்பிற்கு தேர்ச்சி வழங்குதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2020

EMIS இணையதளத்தில் மாணவர்களது விபரங்களை பொது தொகுப்பிற்கு ( common pool ) அனுப்புதல் மற்றும் அடுத்த உயர் வகுப்பிற்கு தேர்ச்சி வழங்குதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் :

எமிஸ் :

மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) +2 பயின்ற மாணவ மாணவிகளுக்கு மாற்றுச்சான்றிதழ் ( Transfer certificate ) வழங்கியிருப்பீர்கள் என்பதால் , அம்மாணவர்களது விபரங்களை எமிஸ் இணையதளத்தில் students -- > students TC details . +2 பயின்ற மாணவர்களது பெயருக்கு எதிரே உள்ள யை கிளிக் செய்து , terminal class என்பதை தேர்வு செய்து , சார்ந்த மாணவனின் விபரத்தை common pool க்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. பிற வகுப்புகளிலும் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு , மாற்றுச் சான்றிதழ் எமிஸ் தளத்தில் தயார் செய்தபின் , அம்மாணவரது விபரத்தையும் common pool ற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.


துவக்க நடுநிலை / உயர்நிலைப் பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பயின்ற மாணவர்களுக்கும் / பள்ளி மாறுதல் காரணமாக வேறு பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழ் தயார் செய்தபின் , அம்மாணவரது விபரத்தை common pool ற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. இப்பணிகளை முடித்த பின்பே , தங்கள் பள்ளியில் பயிலும் பிற வகுப்பு மாணவர்களுக்கு எமிஸ் இணையதளத்தில் அடுத்த உயர் வகுப்பிற்கு தேர்ச்சி ( promotion ) வழங்கவும் , அதனைத்தொடர்ந்து புதிதாக சேர்க்கை செய்யப்படும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்குமான பணிகளை மேற்கொள்ள இயலுமென அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. தேர்ச்சி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேதி குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

5 comments:

  1. நடுநிலைப்பள்ளிகளில் ஏன்‌பகுதிநேர கணினி ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது

    ReplyDelete
  2. எல்லாம் இந்த மங்குனி அமைச்சரே கேளுங்க செங்கல்பட்டு செங்கல்பட்டு டு செங்கோட்டை

    ReplyDelete
  3. 10 மாதங்களில் தீர்வு ஏற்படும்

    ReplyDelete
  4. கவலை வேண்டாம் நண்பர்களே

    ReplyDelete

  5. August 14, 2020 at 3:54 PM
    நடுநிலைப்பள்ளிகளில் ஏன்‌பகுதிநேர கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் TC பணி வழங்கப்பட்டது மற்ற ஆசிரியர்களைக் கொண்டு பணி செய்யலாமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி