Flash News : 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10 ஆம் தேதி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2020

Flash News : 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10 ஆம் தேதி வெளியீடு.

 

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 முடிவுகள் வெளியீடு மற்றும் தற்காலிக பதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான நாட்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்தி குறிப்பு.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2020 தொடர்பான தேர்வு முடிவுகள் 10.08.2020 ( திங்கட்கிழமை ) அன்று காலை 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி , மாதம் , வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம் . 

1. www.tnresults.nic.in 

2. www.dge1.tn.nic.in 

3. www.dge2.tn.nic.in 

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்குப் பதிலாக , மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின் , 17.08.2020 முதல் 25.08.2020 வரையிலான நாட்களில் பயின்ற பள்ளியின் வாயிலாக குறை தீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து , பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரகத் தேர்வுத் துறை இணைய தளம் ( www.dge.tn.gov.in ) மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் :

17.08.2020 முதல் 21.08.2020 வரையிலான நாட்களில் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் .

1 comment:

  1. Private candidate results yeppadi sir nangalum tutorial muliyamaga padikirom plus science public practical class attend panni irukom exam Yeluthi irukom aaga engal vali yepdi sir 10000 students irukom????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி