NEP - மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஆட்சேபனை! - kalviseithi

Aug 25, 2020

NEP - மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஆட்சேபனை!


தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக கருத்துக்களை கூற மத்திய அரசின் கல்வித்துறைச் செயலாளர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் முனைவர் அ.மாயவன் முதலமைச்சருக்கு திங்களன்று ( ஆக.24 ) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : மாநில பட்டியலில் இருந்த கல்வி , தற்போது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதுதான் அனைத்து சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணம். கல்வித்துறையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.


தேசிய கல்விக் கொள்கை -2020 நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்கப்படவில்லை. தமிழக அரசும் இது தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஆராய அமைக்கப்பட்ட குழுவும் அதன் பணிகளை தொடங்கவில்லை. இந்நிலையில் , மத்திய அரசின் கல்விச் செயலாளர் , ஆசிரியர்கள் , பள்ளி , கல்லூரி முதல்வர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்த தங்களுடைய கருத்துக்களை ஆக.31 க்குள் நேரடியாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருப்பது ஆரோக்கியமான நடைமுறையல்ல. இது குறித்து ஆசிரியர்களக்கு முதலமைச்சர் ஆசிரியர்களுக்கு , ஆலோசனை வழங்க வேண்டும்.


இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

 1. மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
  மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

  மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
  மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

  தத ச்ச்ச் தஹாய்

  வானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே - நாம
  வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே தத ச்ச்ச்

  வானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே நாம
  வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே - ஆனா

  தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே

  தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே - இது
  தகாது இன்னு எடுத்துச் சொல்லியும் புரியல்லே அதாலே

  மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
  மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

  தஹாய் ஹா என்னடா நெளிஞ்சுகிட்டுப் போறே த

  தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
  குறையை மறந்து மேலே பாக்குது பதரு

  தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
  குறையை மறந்து மேலே பாக்குது பதரு அதுபோல்

  அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே
  அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே - எதுக்கும்
  ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே அதாலே

  மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது
  மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

  தஹாய் ஹா ச்ச் த

  ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
  ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே

  ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
  ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே

  பூனையைப் புலியாய் எண்ணி விடாதே தம்பிப் பயலே
  பூனையைப் புலியாய் எண்ணி விடாதே தம்பிப் பயலே ஒண்ணப்
  புரிஞ்சிக்காமலே நடுங்கிடாதே தம்பிப் பயலே.....டேய்...

  மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
  மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

  மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
  மாறுவதெப்போ தீருவதெப்போ....ஆ......ஆ.......ஆ...

  ReplyDelete
 2. NEP திணிப்பு வேண்டாம்...ச‌ம‌ஸ்கிருத‌,இந்தி திணிப்பு வேண்டாம்..ஜ‌ன‌நாய‌க‌ முறையில் விவாதிக்காம‌ல் எந்த‌ ஒரு ச‌ட்ட‌த்தையும் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ கொண்டு வ‌ருவ‌து என்ப‌து நாட்டையே சின்னாபின்ன‌ப்ப‌டுத்தி விடும்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி