சம்பளம் ஒரே தேதியில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? PTT ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2020

சம்பளம் ஒரே தேதியில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? PTT ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!

 


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்  10 கல்விஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையானது சர்வ சிக்சா அபியான் மூலம் மாணவர்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்கி வருகிறது. இது தற்போது சமக்ர சிக்சா என பெயர் மாறிவிட்டது.

உடற்கல்வி ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களை 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.

இதற்கான ஆசிரியர்கள் பகுதிநேரப் பணியில் நியமிக்கப்பட்டார்கள்.

இதில் தமிழகத்தில் 2011 – 2012 ஆம் கல்வியாண்டில் மார்ச் மாதம் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.

முதன்முதலாக 2014ம் ஆண்டு ரூ.2ஆயிரம் உயர்த்தி தொகுப்பூதியம் ரூ.7ஆயிரமானது.
பின்னர் 2017 ஆம் ஆண்டு ரூ.700 உயர்த்தி தொகுப்பூதியம் ரூ.7ஆயிரத்து 700 ஆனது. இதன் பின்னர் ஊதியம் உயர்த்தவில்லை.

இவர்களின் சம்பளமானது இசிஸ் முறையில் வழங்கப்படுவதாக சொன்னாலும் மாதம் முதல் தேதியில் கிடைப்பதில்லை என தெரிகிறது. 

10 ஆண்டுகளாக பணிபுரியும்போதும் மாநிலம் முழுவதும் ஒரே தேதியில் பகுதிநேர ஆசிரியர்கள் சம்பளத்தை பெற முடியாத நிலையை அரசு மாற்ற வேண்டும். 

ஆசிரியர்கள் மற்றும் இதர பணியார்களுடன் இணைத்து பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து  பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது :-

மாண்புமிகு அம்மா மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  16549 பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தார்.

வேலைநிறுத்த காலங்களில் அரசுக்கு உறுதுணையாக இருந்தோம்.

இன்றளவும் பகுதிநேரம் என்பதை தாண்டி பள்ளிப்பணிகளில் எல்லாவகையிலும் முழுஅளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறோம். 

எங்களில் மரணம், பணிஓய்வு என சுமாராக 5ஆயிரம் காலியிடங்கள் போக எஞ்சிய 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை ரூ.7700 தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி புதுவாழ்வு கொடுங்கள்.

பணிநிரந்தரம் செய்வதற்கு கமிட்டி அமைக்கப்படும் என்ற 2017ஆம் ஆண்டு சட்டசபை அறிவிப்பை அமுல்செய்ய வேண்டும் என்றார்.

தொடர்புக்கு :-
செந்தில்குமார் 
மாநில ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 
செல் 9487257203

9 comments:

  1. Vagaradhu thada sambalam idhula month first day salary venuma irugada inum konja naal la velaya vitu anupuvaga road la ninnu Pichai yeduga.

    ReplyDelete
  2. Part time teacher romba pavam pa ea ippudi comment poduringa avnga nilamai avangaluku avnga poraduranga adhula enna thappu irruku...10 years kasta paduranga weekly three days mattum tha work matha days ku mattum thaniya job kidikararhu romba kastam ...romba kasta paduranga mela comment poatavaruku onnu solura..oru ptt work panna staff mrg pannitaru avangaluku oru child poradhudchu andha paya lkg padikara avnga family romba kastathula irruku idhanala avabgalukula sandai varudhu ..avnganala veliyum vida mudiyula..ivangalukku oru govt naladhu pannina ...avnga elloarudaiya life nalla irrukum ..plz Oru common man a solura yarum ivangalukku support pannatiyum onnum illa but avangala kastapaduthura mathiri comment poda veandam plz..naa PTT illa...

    ReplyDelete
    Replies
    1. Ama nanum nambita ne PTT illadha

      Delete
    2. Vadivelu joke dha mind la varudhu Ava aadivagitu yaro adivagana madhri stage la pesuvala same comedy🤪🤪🤪🤪

      Delete
    3. Ptt kaga ivvlo neram kashta pattu message type pannirukinga great than neenga

      Delete
    4. Neega ellarumay mandhia jenmam ma neega chi kevalama irruku...ptt avanga neyatha ketkaranga ea orutha noda kastam unkulu santhosatha kodukum na nalla thitikonga da lusu kumutaigala

      Delete
  3. Tr transfer counciling eppothu sir... .

    ReplyDelete
  4. Petchai edukala nanga engal urmaiya vaikkiroam ....Exam eludhi tha permanent panna veandum nu sonna adhuku nanga ready a irrukom Naga ketpadhu onnu tha Exam vatchu edukum podhu oru perority engAluku koduka veandum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி