Student Admission - அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2020

Student Admission - அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்.


தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கு புதிய மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால் ஜூன் மாதத்தில் துவங்கவேண்டிய பள்ளிகளானது தற்போது மாணவர் சேர்க்கையும் பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள அரசு பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.


தமிழ் வழி கல்வி, ஆங்கில வழி கல்வி என இரண்டு வழி கல்விகளுக்கும் இன்றைய தினம் மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. காலை முதலே விண்ணப்பங்களை பெற்ற பெற்றோர்கள் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இதில் ஆங்கில வழி கல்வி கற்பதற்கு வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அரசு தரப்பில் அதிகபட்சமாக காலை, பிற்பகல் மற்றும் மாலை என 20 பேர் வரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 


தொடர்ந்து, அதிகளவில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு மாணவர் சேர்க்கைக்காக வரக்கூடிய பெற்றோர்கள் அதிகளவில் இருப்பதால் எந்த தினத்தில் குழந்தைகளுடன் வந்து மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என்பது தொடர்பான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. குறைந்த அளவில் தமிழ் வழி கல்விக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு இன்றைய தினம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

10 comments:

  1. எனது இரு பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி தரம் அரசு பள்ளிகளிளும் கிடைக்கின்றன

    ReplyDelete
  2. மிகவும் நன்று

    அரசுப் பணி வேண்டுமா ?

    குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்

    ஆசிரியர் பணி பெற தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள ,பயிற்சி பெற இலவச பாட நூல் வரிக்கு வரி குறிப்புகள் PDF பெற :

    http://www.youtube.com/c/MUNITNPSCTET

    PDF இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.
    நன்றி

    ReplyDelete
  3. அரசுப்பள்ளி தான் சிறந்தது
    மன அழுத்தம் இல்லாதது

    ReplyDelete
  4. நல்ல பதிவு

    ReplyDelete
  5. நல்ல பதிவு

    ReplyDelete
  6. நல்ல பதிவு

    ReplyDelete
  7. சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  8. Akbar tnpsc maths channel for those who are preparing for the TNPSC exams

    SUBSCRIBE and share it with your Friends

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி