10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2020

10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு!

 


1 . தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் , இரண்டாம் நிலை காவலர் ( மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை- ஆண் , பெண் மற்றும் திருநங்கை ) , இரண்டாம் நிலைக் காவலர் ( தமிழ்நாடு சிறப்புக் காவல்படை -ஆண் ) இரண்டாம் நிலை சிறைக் காவலர் ( ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் ( ஆண் ) பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020 - க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பத்தினை ( Online application ) வரவேற்கிறது.

2 . விண்ணப்பதாரர்கள் இக்குழும www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . ஏனைய இதர வழிகளான விண்ணப்பப் படிவம் மற்றும் தட்டச்சுப் படிவம் மூலமாக விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

3 . இத்தேர்விற்குரிய முழு விவரங்கள் அடங்கிய தகவல் சிற்றேட்டினை இக்குழும www.tnusrbonline.org இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தினை நிரப்பிடுவதற்கு முன்னர் , இக்குழும இணையதளத்திலுள்ள தகவல் சிற்றேடு மற்றும் விண்ணப்பம் எப்படி சமர்ப்பிக்க வேண்டும் எனும் அறிவுரையினையும் பதிவிறக்கம் செய்து அவற்றிலுள்ள விவரங்களை முழுமையாகப் படித்த பின்னர் இணைய வழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

4. காலிப்பணியிடங்கள் : 10,906 . துறைவாரியான காலிப்பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Police Exam Notification 2020 - Download here...


Police Exam Syllabus - Download here...

18 comments:

  1. Pg trb is also coming. All are study well

    ReplyDelete
  2. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்வு செய்யும் காவல் துறையில் 11000 காலிப்பணியிடங்கள் என்றால் 8 வருடமாக காத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வெரும் 600. அதுவும் இன்னும் நிறபப்படவில்லை

    ReplyDelete
  3. யார் சொல்வதையும் நம்பி யாமார வேண்டாம் ௮வரவர் வேலை பார்த்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. Replies
    1. ௮வர்தான் பள்ளி கல்வி இயக்குநரா?

      Delete
    2. Nan pallikalvi iyakunar alla. I am a post graduate teacher in commerce avlothan sk sir

      Delete
    3. ஒரு தேர்வே முடிவடையாத நிலையில் ௮டுத்ததேர்வு ௭ப்படி சாத்தியம் வாய்ப்பு இல்லை

      Delete
    4. 2017 pg trbla chemistry postings inum pending iruku ana 2019 pg trb posting potachu. 2019 la chemistry postings irukuthan ana examku munadi fill paniruvanga.

      Delete
    5. Nan argue pana varala sir. Eala friendsum nambikaiya padinga kandipa pg trb undu. All the best for the exam.
      Anyway sk sir sorry ungalta konjam argue panaduku.

      Delete
    6. தலைவா?? 2017 Posting இன்னும் போடலையா? Case எங்க நடக்குது?. Chennai or supreme court?? Pl reply

      Delete
    7. டேய் Sk மனநோயாளி.. பிரபாகர் எவ்வளவு தன்னம்பிக்கையா சொல்றாரு அது மரமண்டையில ஏறலயாடா SK மனநோயாளி சங்க தலைவா..

      Delete
    8. Dai keena koo. கோச்சிங் நடத்தி பணம் சம்பாதிக்க ௮ப்படிதான் சொல்வங்க ௮டுுத்து செல் நம்பர் கொடுத்து ஆன்லைன் கிளாஸ் சொல்லுவார்கள் பா௫ நாய டே படிச்சமுட்டாள் ௭ப்படி வ௫ம் யோசி

      Delete
  5. நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக போலிஸ் பணிக்கு ஆட்களை தெரிவு செய்கிறார்கள். ஆனால் ஆசிரியர் பணிக்கு ஏழு ஆண்டுகளாக ஏன் தெரிவு செய்ய யோசிக்கிறார்கள்? 😭😭😭

    ReplyDelete
  6. வனத்துறை question & answer challenge மற்றும் 1:3 ல் தேர்வானார்களின் பட்டியலை வெளியிடலாம்.ஏன் தாமதம்?

    ReplyDelete
  7. வனத்துறை தேர்வில் தேர்வானார்களின் பட்டியலை வெளியிடுவதற்கும்
    கொரானாவுக்கும் தொடர்பும் இல்லையே. அதை வெளியிடுவதில் என்ன சிக்கல்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி