11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2020

11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 


தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளிலும், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும், நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.


தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளிலும், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனக் கூறினார்.


மேலும், கிசான் சம்மான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றார்.


முன்னதாக, மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, 52 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி