அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பெற்றோர்களே ! இன்றுடன் சேர்க்கை நிறைவு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2020

அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பெற்றோர்களே ! இன்றுடன் சேர்க்கை நிறைவு !

 


அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்!..

நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம்  மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர்.


 மாணவர் சேர்க்கை இன்று மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள்,  பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது..

15 comments:

 1. https://www.youtube.com/watch?v=BXk7dQOqlKM&feature=youtu.be

  ReplyDelete
 2. https://www.youtube.com/watch?v=hICQrxUpTrU

  ReplyDelete
 3. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

  ReplyDelete
 4. வரும் தேர்தலில் இந்த ஆளும் கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காத ஆசிரியர்களும் அவர்களின் உறவினர்களின் வாக்குகளும் நிச்சயமாக இந்த ஆளும் கட்சிக்கு சென்றடையக்கூடாது. ADMK வரும் தேர்தலில் படு தோல்வி அடைய வேண்டும்.

  ReplyDelete
 5. Replies
  1. Theriyalaiye pa.... Ivanunga irukkara varaikum Ori aanium pudunga maatanunga....

   Delete
 6. அவங்க அவங்க சொந்தமாக ஏதாவதொரு வேலையை பாருங்கள். அரசு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க விரும்பவில்லை. தற்காலிக பணியாளர்களை நியமித்து சொர்ப்ப ஊதியம் கொடுத்து விட்டு பெரும் தொகையை அத செய்தோம் இத செய்தோம் என்று வேறு திட்டங்களில் போட்டு பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி