சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்தில் விடுபட்ட மாணவா்களின் விவரங்களை சமா்ப்பிக்க உத்தரவு! - kalviseithi

Sep 30, 2020

சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்தில் விடுபட்ட மாணவா்களின் விவரங்களை சமா்ப்பிக்க உத்தரவு!

 


அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தில், விடுபட்ட மாணவா்களின் விவரங்களை உடனடியாக சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:


அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் (சுயநிதி பாடப்பிரிவு தவிா்த்து) 2019-20 கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்புப் பயின்று தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிா்க்கும் பொருட்டு, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின்படி, மாணவா்களின் விவரங்கள் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு விவரங்களை கல்வியியல் மேலாண்மைத் தகவல் அமைப்பின் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தொடா்புடைய முதன்மைக் கல்வி அலுவலா்கள் வாயிலாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இவற்றில் சில விவரங்கள் முழுமையாக இல்லை.


எனவே, அவற்றை மீண்டும் பதிவு செய்து அனுப்ப, தலைமையாசிரியா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த விவரங்களைத் தொகுத்து, முதன்மைக் கல்வி அலுவலா்கள் சரிபாா்த்து அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

4 comments:

  1. https://www.youtube.com/watch?v=BXk7dQOqlKM&feature=youtu.be

    ReplyDelete
  2. https://www.youtube.com/watch?v=hICQrxUpTrU

    ReplyDelete
  3. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி