பள்ளிகள் திறப்பு எப்போது? அக்., 1ல் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2020

பள்ளிகள் திறப்பு எப்போது? அக்., 1ல் முடிவு



 ''அக்., 1ல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், அக்., 1ல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் முடிவு எடுப்பார்.

இது குறித்து, சுகாதாரம், வருவாய் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஒருங்கிணைந்து, முதல்வர் தலைமையில் நடக்கும், உயர்மட்ட குழு கூட்டத்தில் தான் முடிவுகள் மேற்கொள்ள இயலும்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில், 14474 என்ற ஹெல்ப் லைன் உள்ளது. இந்த எண்ணில், பாடத்தில் சந்தேகம் உள்ள மாணவர்களுக்கு, காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை விளக்கம் அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

9 comments:

  1. அமைச்சரே சுயநினை கொண்டு தான் பேசுகிறீர்களா. ஒரு செய்திக்கு இன்று ஒரு தகவல் நாளை ஒரு தகவல் தருகிறீர்கள்.

    ReplyDelete
  2. அவருடைய சூழ்நிலையில் இருந்து பாருங்கள் அப்போது தெரியும்.ஒரு வீட்டைச் சமாளிக்கவே நாம் எவ்வளவு கஷ்டப்பட வேண்டி உள்ளது.எடுத்தோம்கவிழ்த்தோம் என்று பேசுவது தமிழகத்தில் மட்டும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அப்போ வீட்டில் உங்களைப் போல் அமைதியாக இருக்க வேண்டும்....🙄🙄🙄🙄🙄

      Delete
  3. Yow தயவு செய்து மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பாதே...ஏதாவது ஒரு முடிவு சாெல்லு...

    ReplyDelete
  4. G.O. release panniyachu... appuram enna sir aalosanai pandringa? Worthless education minister

    ReplyDelete
  5. Then open even colleges ,school students enna muttala ,appo colleges thoranga sir 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    ReplyDelete
  6. கல்வி குறித்த அரசின் முடிவில் தான் மாணவர்களின் எதிர்காலம் உள்ளது.அரசு குழப்பம் இன்றி தெளிந்த முடிவு எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  7. இவன் ஒரு முட்டாள் அமைச்சர்.

    ReplyDelete
  8. அவர் ஒரு முட்டாள் அமைச்சர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி