அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான வழக்கு: 2 வாரத்தில் தமிழக அரசு, யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2020

அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான வழக்கு: 2 வாரத்தில் தமிழக அரசு, யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!



தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சியடைய செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக கருதப்படுகின்ற ஏ.ஐ.சி.டி.ஐ. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எழுதிய கடிதம் வெளியானது. 


இறுதி ஆண்டு மாணவர்கள் அரியர் தேர்வை எழுதாமல் தேர்ச்சி பெற வைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. அரியர்  மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது. அரியர் மாணவர்களுக்கு  தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது  உத்தரவை மீறினால் அண்ணா  பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதற்கிடையே, அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா  பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவில், 

கலை, அறிவியல், எம்.சி.ஏ. பொறியியல் படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. 


 கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகத்தின் மதிப்பு கெடும். அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்பது  படித்து தேர்ச்சியடைந்தவர்களை சோர்வடையச் செய்யும். 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்கள் ஒரே நேரத்தில்  தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் குறையும். தேர்வின் மூலம் தான் போட்டித்திறன், செயல்திறன், நம்பகத் தன்மை  ஆகியவை பிரதிபலிக்கும். பல்கலைக்கழக தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களை தேர்ச்சி  அடையச் செய்தது தவறு. எனவே, தமிழக அரசு அறிவித்த முடிவை ரத்து செய்யக்கோரி மனுவில் கோரியிருந்தார்.


 இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு, யுஜிசி மற்றும் ஏ.ஐ.சி.டி.இ-க்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

1 comment:

  1. TNPSC -க்கு தயாராவது போல் தயாராக வேண்டும் என்று இங்கு குறிப்பிடுகிறார் ஒருவர். அதிலாவது பணியிடம் நிரப்பப்படுகிறது. தற்போது கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகவே நியமனம் இல்லவே இல்லை. நான்கான்டுகளாக விரைவில் .... இரண்டு மாதங்களுக்குள்... இரண்டு வாரங்களில் என்று மட்டும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டே.......... இருந்தது. தற்போது அந்த வடையையும் காணவில்லை. அதுகூட நடைபெற வில்லை. ஒரு தகுதித் தேர்வு நடந்து எந்த பணியிடங்களும் நிரப்பவில்லை. அதில் தான் நிரப்பப்பட்டதே என்கிறீர்கள். அவர்கள் சம்பளம் பெற்றால் மற்ற அனைவரும் சம்பளம் பெற்றதாக அர்த்தமா? அந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனால் பாழாய்போன வெய்ட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் எந்த அளவிற்கு மதிப்பெண் பெறுவார்கள் தற்போது இவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த இரண்டு மதிப்பெண்களையும் ஒப்பிட்டால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை படித்தவர்கள் வேலைக்கு செல்லவே முடியாத நிலை உருவாகியுள்ளது. இது அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏறவே ஏறாது. தற்போது படித்தவர்கள் மட்டுமே தேர்வாவார்கள். இவர்களுக்கு வயது இருக்கிறது. அதனால் கோச்சிங் சென்டருக்கும் செல்வார்கள். ஆனால் பத்தாண்டுகளுக்கும் முன்பு படித்தவர்கள் திருமணமாகி வேலைக்குச் சென்று குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் கோச்சிங் சென்டர் சென்று கொண்டே இருக்க முடியுமா? போஸ்டிங் கே போடாத இந்த அரசை நம்பி? எப்போது விடியும்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி