கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்களை அதிகரிக்க அனுமதி: அரசு உத்தரவு. - kalviseithi

Sep 11, 2020

கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்களை அதிகரிக்க அனுமதி: அரசு உத்தரவு.


கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்தாண்டு கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரிக்க தமிழக கல்லூரி கல்வி இயக்குநர் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி கலை பிரிவுகளில் 20 சதவீத இடத்தையும், அறிவியல் பிரிவுகளில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீத இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த சம்பந்தட்ட பல்கலைக்கழங்களில் அனுமதி பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. 1998 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளில் சேர்க்கப்பட்டது.ஆனால் இப்போது ஒரு வகுப்பில் 40 முதல் 50 மாணவர்கள் சேர்க்கபடுகிறது.எப்படி கல்வி தரம் உயரும். இந்த லட்சணத்தில் 80% ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது.அதாவது சுமார் 7000 ஆசிரியர்கள் பணியிடங்களில் 6000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. மாணவர்களை சேர்த்தால் மட்டும் போதாது போதுமான அளவில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. Very good decision most of the parents expect Govt college

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி