வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு - அதிகாரிகள் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2020

வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு - அதிகாரிகள் தகவல்

 


வருமான வரித்துறையில் கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.



அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ந் தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது வருகிற 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள், கணக்கு தாக்கல் செய்யாதோர், செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேற்கண்ட தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி