செயல்படாத ஆசிரியர் தேர்வு வாரியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2020

செயல்படாத ஆசிரியர் தேர்வு வாரியம்.

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 01.03.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக ஜுன் மாதம் 23,27ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது நவம்பர் மாதம் 25 - ஆம் தேதி வெளியிட்டது. பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது ஜனவரி மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது ஜனவரி 11 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதில் கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக முதுகலை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. மேலும் தடையாக இருந்த அனைத்து வழக்குகளும் 26.08.2020 அன்று முடித்து வைக்கப்பட்டு, முதுகலை கணினி ஆசிரியர்களை 16.09.2020க்குள் உடனடியாக நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மெத்தன போக்குடன் செயல்படுவதாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் தீர்வு கிடைக்கப்பெறமால் தொடர்ந்து முதுகலை கணினி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.


இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 824 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும் தற்போது உள்ள சூழலில் மாணவர்களுக்கு கணினி வழி கல்வி (Online Class) மற்றும் இதைத் தவிர்த்து அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களின் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

69 comments:

 1. கணினி அறிவியல் படித்ததைத் தவிர, வேறெந்த தவறும் செய்யவில்லைேயே.

  ReplyDelete
  Replies
  1. தேர்வில் குளறுபடி நடந்தது உண்மை சர்வர் பிரச்சனை | கணினி பற்றாக்குறை / ஒரு மணி நேர கால தாமதம் , 2 வது முறை தேர்வு, என பல குளறுபடி எனவே TRB தேர்வை திரும்ப நடத்துவது உத்தமம், exam Centre Cape institute of Technology Tirunelveli District, அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது / சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , காவல் துறை அதிகாரி களின் சாட்சி வாக்குமூலம் | ஆகியவை என்னிடம் உள்ளது, தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என்பது சுத்தப் பொய் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் வாய்மொழியாகும், நளினி சிதம்பரம் மூலம் பணம் கொடுத்து காரியம் சாதிப்பது அநியாயமாகும்

   Delete
  2. நீங்கள் கூறி இருப்பது சுத்தம் பொய். ஆன்லைன் தேர்வில் நம்முடைய வினாதாளைப் பார்த்து எழுதவே நேரம் கிடையாது. இதில் பிறரைப் பார்த்து எழுது வாய்ப்பே இல்லை. பிறகு நீங்கள் வைத்திருக்கும் வீடியோவை யூடியூபிலாவது அப்லோட் பண்ணுங்க பார்ப்போம்.

   இன்னும் பத்து நாட்களுக்குள் 817 இடங்களுகளுக்கான பணி இடம் நிரப்பப்படும். அதையும் இந்த இணையத்திலேயே பார்க்கலாம். அப்போது சந்திக்கலாம்.

   டாட்டா...

   Delete
  3. நளினி சிதம்பரம் மூலம் பணம் கொடுத்து 652 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர் குடும்பத்தை கெடுத்தவர், நளினி சிதம்பரம் ௭ல்லா நேரம் மூம் வெற்றி கிடைக்காது

   Delete
  4. இந்த பணியிடத்தை ஆண்டவர் நிறுத்துவார் .

   Delete
  5. Satya beeman sir negal soinadhu 100% unmai andha exam la just oru 100 member dha nermaya pass agi select agirukaga yelam avlovum poi fraud velai ivaga naila padichirudha inoru exam ku bayapada theva illa ye bayapadanum unkita knowledge iruku la aparam inoru exam yeludhavey ivlo bayapadara nee yepadi students ku updateful ah class edupa sir neraya amount poiruku Ella exam centre cctv footage partha theriyum Salem kavery clg of engineering also andha cctv footage ah govt ah YouTube la upload pana soiluga pakalam oru system ku inoru system ku thaduupu kuda illa sir avaga avaga istathuku nenachamadhiri ukandhu exam eludhinagalam ye friend vandhu yeta avaney olarita oru lady ku server work agama one hour late ah vandhucham andha lady one hour extra exam yeludhiruku with discussion iva kuda parthu eludhinanu then rough useku kudutha Sheetla answers yeludhi exchange panitadhagavum yeta soina Na idhala andha clg video va analysis pani youtubela partha theriyum unmaya na exam attend panala sir I am B.sc b.ed only yegaluku chancey illa ana iva soinapa kasatama irudhuchi yenala onnu seiya mudiyadhu exam yeludhi kastapatavaga keluga kavery clg of engineering Salem videos ah full ah analysis pana soilu ga.

   Delete
  6. அது எப்படி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வில் முறைகேடு நிறைய நடந்து இருக்குனு சொல்லிகொண்டே இருக்கிங்க ஏன் அதை நிரூபிக்க முடியல. இவ்வளவு விளக்கமாக இங்கே சொல்லுற கதையை ஏற்க்கனவே இருக்கிற வழக்கில் நிரூபிக்க வேண்டியது தானே. தேர்வு நடந்து 15 மாதம் ஆகிவிட்டது இன்னும் இதே சொல்லிகொண்டே இருப்பதால் பொய் உண்மை ஆகிவிடாது.

   Delete
  7. இவ்வளவு நாள் பள்ளி திறக்காமல் இருந்த காரணத்தால் பணி நியமனம் நடைபெறவில்லை. அக்டோபர் 1 முதல் பள்ளி திறப்பதால் கூடிய விரைவில் பணி நியமனம் நடைபெறும். அதை எந்த ஆண்டவர் நினைத்தாலும் நிறுத்தமுடியாது

   Delete
  8. Camera view court la submit panala mr Venkatesan adha submit pana vacha nadakum panam Vela seiydhu

   Delete
  9. பணத்தால் எதையும் சாதிக்க முடியும். Venkatesan. Polytechnic exam cancelled. Same this pg computers exam also cancelled coming soon

   Delete
  10. இப்படியே பேசிக்கொண்டு இருக்கிற இலவு காத்த கிளிகளை நிறைய பார்த்து விட்டாச்சு

   Delete
  11. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

   Delete
 2. Replies
  1. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

   Delete
 3. டெட் body பழனிசாமி tyree nakkiii

  ReplyDelete
 4. கோர்ட் அவமதிப்பு வழக்கு போட வேண்டியது தானே

  ReplyDelete
 5. பணம் கட்டி தேர்வு மட்டும் எழுதலாம் அது அரசுக்கு லாபம் தரும். ஆனால் வேலை கொடுத்தால் நஷ்டம் வருமே. அதனால வேலை கேக்காதீங்க அடுத்த தேர்வுக்கு பணம் கட்ட ஆளு ரெடியா இருக்கு நாங்க அந்த வேலைய பாக்கத்தான் நேரம் சரியாயிருக்க. அதனால வேலைகேக்காதீங்க. என்பதுதான் இந்த அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மைண்ட் வாய்ஸ். எனக்கு நல்லா கேக்குது. உங்களுக்கு????

  ReplyDelete
 6. வழக்கு முடிந்த தீர்ப்பின் நகல் கொடுக்கவும்
  அல்லது வழக்கு எண் கொடுக்கவும்

  ReplyDelete
 7. Chemistry subject ithe condition than

  ReplyDelete
 8. வட்டார கல்வி அலுவலர், முதுகலை வேதியியல், முதுகலை கணினி, உடற்கல்வி ஆசிரியர்கள் என அனைவரும் TRB தேர்வில் தேர்ச்சி பெற்று தங்களின் பணி நியமனத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசின் பார்வைக்கும் கல்வி அமைச்சரின் பார்வைக்கும் பலமுறை முன் வைத்தும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொய்யான வாக்குரிதியை மட்டுமே தவறாமல் அளித்துவிடுகிறார்கள். வேதியியல் துறையோடு போட்டியிட்டு தேர்வெழுதிய மற்ற துறையை சார்ந்தவர்கள் பணியில் சேர்ந்து தங்களின் ஏழு மாத ஊதியத்தையும் பெற்றுவிட்டார்கள். அதேபோல உடற்கல்வி ஆசிரியர்களும் தங்களின் பணிக்காக மூன்று ஆண்டுகளாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று செய்திகளும் வந்துகொண்டு இருக்கின்றன. அரசியல் ஆதாயத்திற்காக தேர்தலுக்கு முன் இவர்களை பணி அமர்த்திவிடாலம் என்ற மட்டமான சிந்தனை அரசுக்கு இருந்தால் அதற்கேற்ப முடிவே தேர்தலிலும் வரும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கு அறிவை போதிக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் வேறு பாதைக்கு செல்ல இடம் கொடுத்துவிடாதீர்கள். இங்கே கேள்வி கேட்பவர்கள் அனைவரும் தங்களின் திறமையை போட்டித் தேர்வின் மூலமாக நிருபித்தவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமன ஆணையை வழங்கிவிடுங்கள் இல்லையெனில் செயல்படாத ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து விடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Not only chemistry major but not fully fillup in economics major also.economics candidates also waiting for counseling

   Delete
  2. Boss next exam ku prepare pannunga...iniyum ivangala namburathu wasted... election vachuttu postings Ellam poda maattanga...

   Delete
 9. அரசு நீதிமன்ற உத்தரவை மதித்து கணினி ஆசிரியர்களை உடனே பணி நியமனம் செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நீதிமன்ற உத்தரவு எங்கே

   Delete
  2. மேலே கொடுத்துள்ள செய்தியை முழுமையாக வாசிக்கவும்

   Delete
  3. அது செய்தி
   நீதிமன்ற ஆர்டர் காப்பி எங்கே

   Delete
 10. இந்த அரசு எதையும் செய்யாது.யாருக்கும் தெரியாத ஒன்று. தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரியில் 8000 ஆசிரியர் பணியிடங்களில் வெறும் 1400 ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர் .சுமார் 6000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வு மிகவும் மோசம்.

  ReplyDelete
 11. இவர்கள் போஸ்டிங் போடுவதற்கும் தேர்தல் வந்து எடபாடி ஆட்சி முடிவடைந்துவிடும். எனவே அடுத்து அமையும் ஆட்சிதான் பணியிடங்களை நிரப்ப வேண்டிய நிலை உருவாகும்.

  ReplyDelete
 12. அதிமுக அரசு மாறினால் எல்லாமே மாறும்
  கவலைகள் கலையும்
  உதயமாகட்டும் உதயசூரியன்

  ReplyDelete
  Replies
  1. No vote dmk and admk..... dmk um fradu than....dmk ku vote podarathuku admk kaee podalam.....

   Delete
  2. திமுக பக்கா திருட்டு பயலுங்க... அதற்கு இவர்களே எவ்வளவு மேல்... சிந்தித்து செயல்படுங்கள்...

   Delete
  3. இந்த அரசு எங்கும் ஊழல் எதிலும் ஊழல்?ஊழலில் ஆனந்த கூத்தாடும் அரசு

   Delete
  4. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

   Delete
  5. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

   Delete
  6. இந்த அரசு எங்கும் ஊழல் எதிலும் ஊழல்?ஊழலில் ஆனந்த கூத்தாடும் அரசு

   Delete
 13. வாழ்த்துக்கள் TRB

  ReplyDelete
 14. படித்தால் வேலை கிடையாது பணம் இருந்தால் மட்டுமே வேலை. இது தான் இன்றைய அரசுப் பணிகளின் நிலை.

  ReplyDelete
 15. படித்தால் வேலை கிடையாது பணம் இருந்தால் மட்டுமே வேலை. இது தான் இன்றைய அரசுப் பணிகளின் நிலை.

  ReplyDelete
 16. படித்தால் வேலை கிடையாது பணம் இருந்தால் மட்டுமே வேலை. இது தான் இன்றைய அரசுப் பணிகளின் நிலை.

  ReplyDelete
 17. Replies
  1. உண்மை!!! எங்கும் ஊழல் எதிலும் ஊழல் அரசு

   Delete
  2. உண்மை!!! எங்கும் ஊழல் எதிலும் ஊழல் அரசு

   Delete
 18. Satya beeman sir negal soinadhu 100% unmai andha exam la just oru 100 member dha nermaya pass agi select agirukaga yelam avlovum poi fraud velai ivaga naila padichirudha inoru exam ku bayapada theva illa ye bayapadanum unkita knowledge iruku la aparam inoru exam yeludhavey ivlo bayapadara nee yepadi students ku updateful ah class edupa sir neraya amount poiruku Ella exam centre cctv footage partha theriyum Salem kavery clg of engineering also andha cctv footage ah govt ah YouTube la upload pana soiluga pakalam oru system ku inoru system ku thaduupu kuda illa sir avaga avaga istathuku nenachamadhiri ukandhu exam eludhinagalam ye friend vandhu yeta avaney olarita oru lady ku server work agama one hour late ah vandhucham andha lady one hour extra exam yeludhiruku with discussion iva kuda parthu eludhinanu then rough useku kudutha Sheetla answers yeludhi exchange panitadhagavum yeta soina Na idhala andha clg video va analysis pani youtubela partha theriyum unmaya na exam attend panala sir I am B.sc b.ed only yegaluku chancey illa ana iva soinapa kasatama irudhuchi yenala onnu seiya mudiyadhu exam yeludhi kastapatavaga keluga kavery clg of engineering Salem videos ah full ah analysis pana soilu ga.

  ReplyDelete
 19. எல்லாரும் trb யை குறை சொல்லாதீர்கள்,,,,,பார்க்க தான போரிங்க இந்த காளி யோட ஆட்டத்தை!,,,,,,,,15 days pending irukura posting ellam job poda poranga,,,,,trb manathu vaithu vittathu

  ReplyDelete
  Replies
  1. Bro yeppadi conform ma sollureenge 15 days nu??

   Delete
  2. School open panna kandipa nalla thagaval varum nu sonnanga

   Delete
  3. TET ku appointment irukkuma bro. Illa again Oru exam eluthanuma enakku age 45. So therinjavanga sollunga pls.

   Delete
  4. Already exam la selection list la ullavangaluku than bro sonnanga,,,,ungaluku ennanu theriyala bro,,,,

   Delete
 20. Indha trb exam la malpractice nadakala nu exam la selection list la irukavaga matumdha soiluvaga verayarum manasatchiyoda irukavaga soilamataga onnu soilara govt exam la malpractice nadandha dhu therijalum avagala yedhum pana matom avagala exam yeludha vidama ban panamatom nu soili paruga apo ava ava thana vandhu unmaiya uthupa.poi velaya paruga.

  ReplyDelete
  Replies
  1. Naan exam pass illa. Aana naan uruthiya solluven. Paathu elutha vaippe illa. Enga center la belt kooda kalatti vaikka sollitaanga. Then time pathala. Then how it's possible to do mal practice?

   Delete
  2. மனசாட்சி உள்ள உங்களை போன்றோர் தோல்வி அடைந்தாலும் முறைகேடு நடக்கவில்லை என்று கூறுவது மிக சரியான கருத்து. நமக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று இருப்பதால் தான் இன்னும் முறைகேடு என்று சொல்லி கொண்டே இருப்பாங்க

   Delete
 21. Bro yeppadi ivlo conform ma sollureenge 15 days nu?

  ReplyDelete
 22. இந்த செய்தியில் எதுவுமே உண்மையில்லை.

  1. நீதிமன்றம் எந்த அதிரடி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எந்த வழக்கும் இன்னும் முடித்து வைக்கப்படவில்லை. சென்னை, மதுரை என இரு அமர்வுகளிலும் அனைத்து வழக்குகளும் நிலுவையில் தான் உள்ளன. அனைத்தும் இன்னொரு சுற்று விசாரணைக்கு 29ஆம் தேதி வருகின்றன. ஒரு வழக்கில் பணி நியமனத்துக்கு தடை இருந்து வந்தது, அந்த இடைக்கால ஆணை மட்டும் திருத்தப்பட்டு தடை நீக்கம் செய்யப்பட்டது, கடந்த மாதம். பணி நியமனம் உடனடியாக செய்தாக வேண்டும் என எந்த உத்தரவும் அந்த ஆணையில் இல்லை.எந்த தேதி வரையறையும் இல்லை. பணி நியமனம் செய்து கொள்ள அரசுக்கு சுதந்திரம் உண்டு, தடையில்லை இனி என்பதாக மட்டுமே ஆணையில் உள்ளது.

  2. குறிப்பாக 824 பேருக்கு பணி நியமனம் வழங்க இப்போதைக்கு வாய்ப்பே இல்லை.இடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள வழக்குகள் ஏராளம் உள்ளன. வேண்டுமானால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 697 பேரின் பட்டியலுக்கு பணி நியமனம் வழங்கலாம். முழு பட்டியலை வெளியிட்டு அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டுமெனில், சில குறிப்பிட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர் கொண்டாக வேண்டும். அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனவே பணி நியமனம் என வந்தால் இப்போதைக்கு 697 பட்டியலுக்கு வரலாம். இல்லையனெில் வழக்கம் போல் வழக்குகள் முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் பற்றி தானே சொல்றீங்க

   Delete
  2. உடற்கல்வி ஆசிரியர் சங்கர் அவர்கள் 91மதிப்பெண் எடுத்து தமிழ் நாட்டில் முதலில் வந்தவருக்கும் இன்னும் பணி நியமனம் பெறாமல் இருப்பது உண்மையிலயே வேதனைக்கு உரியது,,,,உடற்கல்வி ஆசிரியர் அனைவருக்கும் விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

   Delete
  3. இதில் முதல் இடம் பிடித்தவர் என்ன கடைசி இடம் பிடித்தவர் என்ன? பாதிப்பு என்பது தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தான்.

   Delete
  4. உன்மையான செய்தி தான்,,,,,but drawing tailoring music ellam merit list la ullavanga job poi 1 year agitu,,,,,PET ku fulla job podama vitanga,,,athuku than sonnen

   Delete
  5. Corona oru பாதகமா namaku vanthutu,,,,,enna sir pandrathu

   Delete
 23. wrost Department .only active time notification and exam collection.but not job

  ReplyDelete
 24. Trb la ella work um process poitu iruku

  ReplyDelete
 25. Trb please help pannunga pending list result vidunga

  ReplyDelete
 26. போஸ்டிங் அ அப்டினா என்ன... அதுதான் trb.. எங்களுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி