அரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter! - kalviseithi

Sep 23, 2020

அரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter!

 DR. ராம்பிரசாத் MBBS   என்பார் அரசணை (நிலை) எண்.37 ல் சில தெளிவுரை  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்  கோட்டிருந்தார் 

அதற்க்கான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்  பதில்


பார்வையில் காணும் மனுவின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. அம்மலுவில் தாங்கள் கோரியுள்ளவற்றிற்கு கீழ்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.


வ.எண் .1 குறித்து : அரசாணை ( நிலை ) எண் .37 , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் ( அவி- IV ) துறை , நாள்.10.03.2020 - ல் பத்தி 6 ( 1 ) -ன் படி அவ்வாணை ஆசிரியர்கள் உட்பட அனைத்து துறைகளில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


வ.எண் .2 குறித்து : பள்ளிக் கல்வி இயக்குநர் அரசாணை ( நிலை ) எண் .37 , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் ( அவி- IV ) துறை , நாள் . 10.03.2020 ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது. மேலும் , இத்துறையின் இசைவு பெறாமல் மேற்சொன்ன தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


வ.எண் .3 குறித்து : மேற்குறிப்பிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறையால் கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி