பள்ளிக் கல்வித்துறையில் செப்.28 அன்று நடைபெறவுள்ள அனைத்து கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டப் பொருள்! - kalviseithi

Sep 23, 2020

பள்ளிக் கல்வித்துறையில் செப்.28 அன்று நடைபெறவுள்ள அனைத்து கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டப் பொருள்!

 


பள்ளிக் கல்வித்துறையில் செப்.28 அன்று தொடக்கக் கல்வி சார்பில் நடைபெறவுள்ள அனைத்து கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டப் பொருள் :

1. 2020 – 21 ஆம் கல்வியாண்டில் அரசு , நகராட்சி , ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை பள்ளிகள் , அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்ட விவரம் ( தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , ந.க.எண் . 4577 / ஜெ 2 / 2020 , நாள் . 13.08.2020 ) ( படிவம் 1-4 ) 


2. 2381 அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்ட விவரம் ( அரசாணை எண் .89 , SW & NMP ( SW - 7 ( 1 ) Dept , bróir : 11.12.2018 ) ( படிவம் - 5 ) 


3. 2020 - 21 ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி / யு.கே.ஜி மற்றும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சேர்க்கை செய்யப்பட்ட மாணாக்கர் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை ( EMIS ) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விவரம் ( படிவம் - 6 ) 


4. 2381 அரசு / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளில் 2020 21 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள் , நோட்டுப் புத்தகங்கள் , சீருடை , புத்தகப்பை சென்றடைந்த விவரத்தை EMIS ல் பதிவு செய்யப்பட்ட விவரம் 


5. கல்வித் தொலைக்காட்சி மற்றும் பிற தொலைக்காட்சி சேனல்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்காக ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை நகல் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு வழங்கிய விவரம் ( படிவம் - 7 ) 


6. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி கட்டிடங்களில் சிறப்பு மராமத்து பணிகள் ( Special Repair Works ) மேற்கொள்வது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அளிக்கப்பட்ட விவரம் . ( ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அவர்களுக்கு தொ.க.இ அவர்களால் அனுப்பப்பட்ட கடித ந.க.எண் .011392 / கே 4 / 2017 , நாள் .18.12.2019 ) ( படிவம் - 8 ) 


7. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத பாதுகாப்பற்ற இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் ( To be demolished buildings ) சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரம் ( ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அவர்களுக்கு தொ.க.இ அவர்களால் அனுப்பப்பட்ட கடித ந.க.எண் .011392 / கே 4 / 2017 , நாள் .18.12.2019 ) ( படிவம் - 9 ) 


8. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சுற்றுச் சுவர் ( Compound Wall ) கட்டப்பட்ட விவரம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்படுவதை பார்வையிட்ட விவரம் ( தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , ந.க.எண் . 011392 ! கே 4 ! 2017 , நாள் . 18.12.2019 மற்றும் 06.03.2020 ) ( படிவம் - 10 ) 


9. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் ( Additional class Room ) கட்டுதல் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரம் ( ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அவர்களுக்கு தொ.க.இ அவர்களால் அனுப்பப்பட்ட கடித ந.க.எண் .016199 / கே 4 / 2018 , நாள் .06.03.2020 ) ( படிவம் - 11 ) 


10. குடிநீர் வசதி / கழிப்பிட வசதிகள் ( Additional drinking water , Toilet facilities ) கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் ( படிவம் – 12 ) 


11. ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை துாய்மை செய்வதற்கு அரசாணை எண் .151 , ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ( சிஜிஎஸ் 1 ) துறை , நாள் .30.11.2015 மற்றும் அரசாணை எண் .166 , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ( எம்ஏ 4 ) துறை நாள் .23.11.2016 ன் படி நியமனம் செய்யப்பட்ட துாய்மைப் பணியாளர்கள் துாய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்ந்து ஆய்வு செய்த விவரம் 


12. தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் சார்பான மாநில கணக்காயர் தணிக்கை தடைகள் ( AG audit pending Paras ) நிலுவைப் பத்திகளை நீக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரம் . ( படிவம் - 13 ) 


13. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாதம் ஒரு முறை ஆய்வுக் கூட்டம் ( Review Meeting ) முதன்மைக் கல்வி அலுவலர்களால் நடத்தப்பட்ட விவரம் 


14. வட்டாரக் கல்வி அலுவலகங்களை CEOS , DEOS முன்னறிவிப்பின்றி பார்வையிட்ட ( BEOS Office Surprise Visit ) விவரம் மற்றும் ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட்ட விவரம் ( படிவம் - 14 ) 


15. தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் சார்பான நீதிமன்ற வழக்குகள் ( Contempt Case , DCA , WP , WA மற்றும் SLP ) ஆய்வு செய்யப்பட்ட விவரம் ( படிவம் 15 - 19 ) 


16. ஈராசிரியர் பள்ளிகளில் கடந்தாண்டு மாறுதல் பெற்று விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல் 


17. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்தல் சார்பாக கூட்டமர்வு நடத்தப்பட்ட விவரம் ( தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல் முறைகள் , ந.க.எண் . 1907 / இ 1 / 2020 , நாள் . 05.09.2020 ) 


18. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2019-20ஆம் ஆண்டு மாணாக்கர் எண்ணிக்கையின்படி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்த விவரம் ( படிவம் 20 & 21 ) 


19. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்குதல் கருத்துருக்களை முழுமையான வடிவில் பரிந்துரை செய்தல் 


20. புதிய மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் துவங்குதல் கருத்துருக்களை முழுமையான வடிவில் பரிந்துரை செய்தல்

1 comment:

  1. ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அவர்களுக்கு தொ.க.இ அவர்களால் அனுப்பப்பட்ட கடித ந.க.எண் .011392 / கே 4 / 2017 , நாள் .18.12.2019 . கடிதத்தில் உள்ள படிவங்கள் கிடைக்குமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி