மாணவர்களுக்கு 5 நாள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2020

மாணவர்களுக்கு 5 நாள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு.



கோவிட் -19 பெருநோய்த் தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில் , தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜூன் 2020 முதல் இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.


 ( நிலை ) எண் . 65 பள்ளிக்கல்வித்துறை நாள் 29.07.2020 ல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இணையவழிக்கல்விக்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளும் அவ்வழிகாட்டுதல்களை பின்பற்றி இணையவழி வகுப்புகளை நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் அவ்வரசாணையில் , பள்ளிகளில் நடத்தப்பெறும் ணையவழி வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பத்தி 6.5 - ல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்துப்பள்ளிகளும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


6.5 . 

1 ) இணையவழி வகுப்புகளில் வருகை , மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு நோக்கங்களுக்காக கட்டாயமாக கணக்கிடப்படக்கூடாது.

2 ) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது இணையவழி வகுப்புகளுக்கு வருகை புரியாத மாணவர்களும் , இணையவழி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இணையாக பாடங்களில் பயிற்சி பெறுவதற்காக ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்ப கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும் , 

3. மிண்ணனு முறைகள் மற்றும் மிண்ணனு சாதனங்கள் மூலம் குழந்தைகளுக்கு தொலைவிலிருந்து அனுப்பப்படும் பாடம் சார்ந்த பணிகள் ( Assignments ) மற்றும் மதிப்பீடுகள் ( Assessments ) ஏதும் மாணவர்களின் இறுதித்தரம் / மதிப்பெண்கள் செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை நிர்ணயிக்க கட்டாயாமாகக் கணக்கிடப்படக்கூடாது. 

4. ஆண்டுதோறும் , செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு அறிவிப்பது நடைமுறையாகும். இணையவழி வகுப்புகள் நடைபெறும் தற்போதைய சூழ்நிலையில் , 21.09.2020 முதல் 25.09.2020 வரை ஐந்து நாட்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறையினை அறிவிக்க அரசு உத்தேசித்துள்ளது . எனவே , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலுடன் 21.09.2020 முதல் 25.09.2020 வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்படுகிறது .

9 comments:

  1. Pongada nengalum...unga kalviyum...

    ReplyDelete
  2. My daughter is studying U.K.G. They completed whole portion june itself. Her teacher daily giving homework and test. She feeling bad with this. What can i do? Suggest me

    ReplyDelete
  3. நடைபெறாத பள்ளிக்கு விடுமுறை நல்ல துறை அருமையான அமைச்சர்

    ReplyDelete
  4. Vettatha kenaruku rasitha super admk

    ReplyDelete
  5. Vettatha kenaruku rasitha super admk

    ReplyDelete
  6. கல்விசெய்தி ஆசிரியர்களுக்கு வணக்கம். என் ஐயத்திற்கு தங்களது நல்ல பதிலினை பெற ஆவலோடு உள்ளேன்.
    * அரசு/அரசு உதவி மேனிலைப் பள்ளிகளில் 6முதல் 12 வகுப்பு வரை 500க்கும் குறைந்த மாணவர்கள் உள்ள நிலையில் உதவி தலைமையாசிரியர் பதவி உண்டா?
    * மேனிலைப் வகுப்பிற்கு ஒரு உதவி தலைமையாசிரியர் மற்றும் 6முதல் 10 வரை ஒரு உதவி தலைமையாசிரியர் என்று ஏதேனும் ஆணை உண்டா?
    * மேனிலைப் வகுப்பு உதவி தலைமையாசிரியருக்கு ஒரு வாரத்திற்கு எத்தனை பாடவேளைகள் இருக்க வேண்டும்?
    * மேனிலைப் பள்ளியில் 6முதல்10ஆம் வகுப்பு வரை உள்ள உதவி தலைமையாசிரியருக்கு ஒரு வாரத்திற்கு எத்தனை பாடவேளைகள் இருக்க வேண்டும்?
    * எத்தனை மாணவர்கள் இருந்தால் மேனிலை வகுப்பு மற்றும் 6முதல்10 வரை உதவி தலைமையாசிரியர் பதவி உண்டு?

    ReplyDelete
  7. கல்விசெய்தி ஆசிரியர்களுக்கு வணக்கம். என் ஐயத்திற்கு தங்களது நல்ல பதிலினை பெற ஆவலோடு உள்ளேன்.
    * அரசு/அரசு உதவி மேனிலைப் பள்ளிகளில் 6முதல் 12 வகுப்பு வரை 500க்கும் குறைந்த மாணவர்கள் உள்ள நிலையில் உதவி தலைமையாசிரியர் பதவி உண்டா?
    * மேனிலைப் வகுப்பிற்கு ஒரு உதவி தலைமையாசிரியர் மற்றும் 6முதல் 10 வரை ஒரு உதவி தலைமையாசிரியர் என்று ஏதேனும் ஆணை உண்டா?
    * மேனிலைப் வகுப்பு உதவி தலைமையாசிரியருக்கு ஒரு வாரத்திற்கு எத்தனை பாடவேளைகள் இருக்க வேண்டும்?
    * மேனிலைப் பள்ளியில் 6முதல்10ஆம் வகுப்பு வரை உள்ள உதவி தலைமையாசிரியருக்கு ஒரு வாரத்திற்கு எத்தனை பாடவேளைகள் இருக்க வேண்டும்?
    * எத்தனை மாணவர்கள் இருந்தால் மேனிலை வகுப்பு மற்றும் 6முதல்10 வரை உதவி தலைமையாசிரியர் பதவி உண்டு?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி