வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்! - kalviseithi

Sep 12, 2020

வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்!


அரசுப் பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம்  மாணவர்கள் சேர்த்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா்  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.      


ஈரோடு மாவட்டம் கோபியில் அவர்  செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி: 


அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை புதிதாக 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இந்த ஆண்டு 238 மையங்களில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வை எழுதவுள்ளனர்.


வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. வந்தால் தகவல் தெரிவிக்கிறேன்.


நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு  அரசு  உதவி செய்துள்ளது என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

5 comments:

 1. +2தேர்வு முடிவு எப்படி வந்ததோ அதுபோல் பள்ளிக்கூடம் திறக்கும்

  ReplyDelete
 2. Idiotic person as an education minister is our curse

  ReplyDelete
 3. நீங்க எது சொன்னாலும் அதில 95% நடந்ததேகிடையாது. அந்த அளவுக்கு இந்த Govtல உங்க சொல்லுக்கு மதிப்பிருக்கு.அப்புறம் எதுக்கு sir கவலைபடறீங்க

  ReplyDelete
 4. பள்ளி திறப்பதற்குள் உங்கள் அமைச்சர் பதவி காலாவதியாகும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி