பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் 635 பேர் நியமனம் - kalviseithi

Sep 19, 2020

பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் 635 பேர் நியமனம்

 

பள்ளி கல்வியில் இளநிலை உதவியாளர் பணிக்கு, 635 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழக பள்ளி கல்வியின், பல்வேறு மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் வழியே, புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு, பள்ளி கல்வித் துறை சார்பில், இரண்டு நாட்கள் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தி, பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. 


மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் வழியே, காலி இடங்கள், ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டு, விருப்பமான இடங்கள் ஒதுக்கப்பட்டன.இடங்கள் ஒதுக்கப்பட்ட சிலருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., இன்று பணி நியமன உத்தரவை வழங்க உள்ளார். மற்றவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உத்தரவு வழங்கப்படும். புதிய பணியாளர்கள், வரும், 21ம் தேதி பணியில் சேர, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

11 comments:

 1. சிறப்பாசிரியர்கள் நியமனம் பற்றி சொல்லுங்கள்

  ReplyDelete
 2. Any news about PG trb chemistry 2019 counselling?

  ReplyDelete
 3. Current status pg trb chemistry 2019 supreme Court case details sir?

  ReplyDelete
 4. Process poitu iruku sir wait panni than parkanum

  ReplyDelete
 5. உருப்படாத கோயில்ல உண்டை கட்டி...
  ஸ்கூல் எஜுகேஷன் டிபாட்மென்ட்ல ஜூனியர் அசிஸ்டன்ட் வேலை...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி