மாணவர் சேர்க்கை விவரத்தை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் : அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2020

மாணவர் சேர்க்கை விவரத்தை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் : அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை!



 தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விவரத்தை வருகிற 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அளிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் 2020-21ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரையில் வருகிற 30ம் தேதி வரை சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்ந்து, இந்த விவரங்களை தொகுத்து பள்ளிக்கல்வி இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு அக்டோபர் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இதற்கிடையில் செப்டம்பர் மாதம் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமென கடந்த மாதம் அமைச்சர் அறிவித்திருந்தார். அதாவது கொரோனா காரணமாக இந்த வருடம் பெரிதும் பாதிக்கப்பட்டது கல்வித்துறை. 


இதையடுத்து பொருளாதார நிலைமை கேள்விக்குறியானதால் பல்வேறு தரப்பினரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிக அளவு அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கடந்த மாதம் அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கையானது தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது அதிகளவில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி