பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவது எப்போது?: விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2020

பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவது எப்போது?: விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக அரசு


பள்ளிகளில் எப்போது நேரடி வகுப்புகளை தொடங்குவது? என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய, நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி வகுப்புகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. எனினும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் நேரடி வகுப்புகளை எப்போது தொடங்குவது? குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அக்டோபர் மாதத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளும், அதனைத்தொடர்ந்து படிப்படியாக இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விருப்பப்படும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசும் கூறியுள்ளது. மேலும் வரும் 21ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை கேட்டறியலாம் என்றும், பெற்றோர் சம்மதத்துடன் பள்ளிக்கு செல்லலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே சமூக இடைவெளியுடன் மாணவர்களை வகுப்புகளில் அமர வைப்பது, சுழற்சி முறையிலான வகுப்புகளை நடத்துவது குறித்தும் அரசு அறிவிப்பில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 comments:

 1. communicable prolem so dont open school up to december then situation is possible then open the school otherwise itis dangerous for childrens

  ReplyDelete
 2. Not necessary to open nw ... students can develop their social distance...upto December can wait....

  ReplyDelete
 3. நல்லது. விரைவில் திறக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் அனுப்புவோம். விருப்பம் இல்லாத பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பாதிங்க.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.
   விருப்பம் உள்ளவர்கள் சாகட்டும்
   விருப்பம் இல்லாதவர்களும் சாகட்டும்

   Delete
 4. Appraeduku thalarvukala ethirpakringa. Please open HR sec class. Always students are going elper velai. Knowledge is not improve.

  ReplyDelete
 5. PRIVATE TEACHERS ARE VERY AFFECTED SO HAVE OPEN SOON WITH SAFE

  ReplyDelete
 6. No do not open the school it is difficult to handle children or if you want to open obtain parents consent if they are willing let them otherwise they can home school their children and please ensure these children to write their exams as regular school students without attendance deficit

  ReplyDelete
 7. Good decision by kernels government to reopen by jan 2021 in spite of Lowe cases of covid

  ReplyDelete
 8. Sir school must be opened soon.Corona virus vaccination may come to next year middle .So how long can we close the school Students also psychologically affected because of long leave Schools must follow precaution steps compulsorily and interesting parents can send their children to school.

  ReplyDelete
 9. It is not advisable to open schools till December considering children safety.

  ReplyDelete
 10. Don't open the school. Wait for some more days.

  ReplyDelete
 11. Open in next year ...the situation is worse now and the life of every child matters...

  ReplyDelete
  Replies
  1. Chinna kuldaikaluku Dec than. Only HR. SEC OPEN IS CONFORM. I AM HAPPY.

   Delete
 12. சீக்கிரம் திறந்துவிடுங்கள்.. குடுமிபிடி சண்டை போடாமல் தூக்கம் வரமாட்டுது.. மண்டை வீங்கி வெடிச்சிரும்போலகீது..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி