மாணவர் சேர்க்கை, ஆசிரியர் காலியிடம் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2020

மாணவர் சேர்க்கை, ஆசிரியர் காலியிடம் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு.

 


எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நிலவரம் உட்பட, 20 வகை பணிகளுக்கான புள்ளி விபர பட்டியலை, நாளைக்குள் தாக்கல் செய்யும் படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படவில்லை என்றாலும், மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூலிப்பது, ஆன்லைனில் பாடங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. 

நடவடிக்கை


அதேபோல, அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்குவது போன்றவையும் நடக்கின்றன. 


இந்த வரிசையில், நடப்பு கல்வி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும், 28ம் தேதி, மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி களிடம் தகவல்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எனவே, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை சேர்த்த, புதிய மாணவர்களின் எண்ணிக்கை குறித்த, புள்ளி விபரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை


அதேபோல, ஆசிரியர் காலியிடங்கள், இடிக்க வேண்டிய கட்டடங்களின் நிலை, புதிதாக மழலையர் பள்ளிகள் உருவாக்குதல், அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புக்கு அனுமதி அளித்தல் போன்றவை உட்பட, 20 வகை விபரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர், இதற்கான சுற்றறிக்கை களை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ளனர்.

10 comments:

  1. Computer instructor,,,special teacher PET drawing tailoring,,,pg chemistry ellam job podunga

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

      Delete
  2. 3 வருடம் காத்திருப்பவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்,,,,,உடற்கல்வி ஆசிரியர்

    ReplyDelete
  3. சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும்.

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற நாம் அணைவரும் செக்கு மாடு தான். அது சுத்தி சுத்தி வரும். ஆனால் வீடு போய் சேராது. அதுபோல தான் நம்ம நிலைமையும்.

    ReplyDelete
  5. வெற்றி பெற்ற நாம் அணைவரும் செக்கு மாடு தான். அது சுத்தி சுத்தி வரும். ஆனால் வீடு போய் சேராது. அதுபோல தான் நம்ம நிலைமையும்.

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற நாம் அணைவரும் செக்கு மாடு தான். அது சுத்தி சுத்தி வரும். ஆனால் வீடு போய் சேராது. அதுபோல தான் நம்ம நிலைமையும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி