பள்ளிகளை எப்போது திறப்பது?: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2020

பள்ளிகளை எப்போது திறப்பது?: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்!



பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து, கல்வித் துறை அதிகாரிகளுடன், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார். 


கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கல்வி நிறுவனங்களையும் திறக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. வரும், 21ம் தேதி முதல், ௯ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களை, பகுதி நேரமாக பள்ளிகளுக்கு வர அனுமதிக்கலாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, அக்., 5 முதல், 10ம் வகுப்பு - பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பகுதி நேரமாக முக்கிய வகுப்புகளையும், ஆய்வக வகுப்பையும் நடத்தலாம் என, தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பாக, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தலைமைச் செயலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் மற்றும் அதிகாரிகள், கூட்டத்தில் பங்கேற்றனர்.அப்போது, பள்ளிகளை திறப்பது குறித்து, சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பின், பள்ளிகள் திறப்பு தேதியை முதல்வரிடம் கூறி ஒப்புதல் பெறலாம் என்றும் முடிவானது. 


விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பள்ளிகளில் பாடம் குறைப்பு குறித்து நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீது, பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.எந்தெந்த பாடங்களை குறைப்பது என்பது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியே, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

12 comments:

  1. Please don't open schools for now the cases are increasing day by day and it's very risky to students to go out and for the stupid private schools decision don't open the schools now till the vaccine ready.

    ReplyDelete
    Replies
    1. Eppadiya Katha odtathu nippatu. 5 years illama corano pogathu.

      Delete
    2. Please open school. Students knowledge very poor.

      Delete
  2. விரைவில் அறிவிக்கப்படும் இப்படிக்கு மானங்கெட்ட மங்குனி அமைச்சர் செங்கோட்டையன்....

    ReplyDelete
  3. விரைவில் இவர் சென்று விடுவார்.

    ReplyDelete
  4. Please don't school .Feb 7 2021 only school reopen

    ReplyDelete
  5. Sir Mark base 2013,2017,2019ku pos
    ting podunga
    Illaiyenil case podunga

    ReplyDelete
  6. 2013 batch paithiyam aayitingala....Eppa paaru posting podu nu sollikittu ....evanukkum velai illai .....Vacant illai

    ReplyDelete
  7. ஐயா அமைச்சர் அவர்களே,நாங்கள் கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை. பள்ளிகளைத் திறந்துவிடுங்கள். இல்லையேல் வீட்டிலிருந்தே மன அழுத்தத்தாலும் ஆன்லைன் வகுப்பாலும் பைத்தியமே பிடித்துவிட்டது...அது மேலும் முற்றுவதற்குள் எங்கள் மேல் கருணை கூர்ந்து பள்ளிகளைத்திறக்க கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி