அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2020

அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு !



 தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள 87,000 இடங்களில் சுமார் 72,000 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கையை தொடர்ச்சியாக கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.


இதனிடையே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் உடனடியாக தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


அதன்படி வரும் 30ஆம் தேதி வரை புதிய மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் நடத்திக் கொள்ளலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது .


அரசு கலை , அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் இ ளங்கலை படிப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 31 முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது .


இந்நிலையில் , இளங்கலை ( UG ) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை செப் . 30- ம் தேதியுடன் முடித்து விட்டு , அக்டோபர் முதல் முதுகலை ( PG ) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. மாணவர்கள் சேர்க்கை ஓகே .ஆனால் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எப்படி?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி