இன்ஜி., செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம் - kalviseithi

Sep 19, 2020

இன்ஜி., செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்

 

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரியர் உட்பட அனைத்து மாணவர்களுக்கான, இறுதி செமஸ்டர் தேர்வு, வரும், 26ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


கொரோனா ஊரடங்கால் கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 2019- - 20ம் கல்வி ஆண்டில், இறுதி ஆண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும், கடைசி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.


மேலும், அனைத்து ஆண்டு அரியர் மாணவர்களுக்கும், தேர்வே இல்லாமல் தேர்ச்சி வழங்கி அரசு உத்தரவிட்டது. தேர்வு இன்றி தேர்ச்சி வழங்கினால், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்பதால், முந்தைய கல்வி ஆண்டில், கடைசி செமஸ்டரில் அரியர் வைத்தவர்களும், தேர்வு எழுத வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்தது.


இதன்படி, நாளை மறுதினம், ஆன்லைன் வழி தேர்வு நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகள் அனைத்திலும் படிக்கும் மாணவர்களுக்கு, 26ம் தேதி, ஆன்லைன் தேர்வு துவங்கும் என, புதிய தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி