செமஸ்டர் தேர்வில் மாஸ் காப்பி: ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2020

செமஸ்டர் தேர்வில் மாஸ் காப்பி: ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்

 

கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகளில், மாஸ் காப்பி அடித்ததாக புகார் எழுந்துள்ளது.எனவே, அதுபோன்ற விடைத்தாள்களை பிரித்தெடுத்து, மதிப்பெண் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது.

ஆன்லைன்

தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கொரோனா பரவலால், செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தேர்வே நடத்தாமல், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர்களுக்கும், கடைசி செமஸ்டரில், அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை சார்பில், ஆன்லைனில் மாணவர்கள் தனித்தனியாக தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், மற்ற பல்கலைகள் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதி, விடைத்தாள்களை அனுப்ப உத்தரவிடப்பட்டது.

நண்பர்களின் வீடு

இந்த தேர்வுக்கான விடைத்தாள்களை, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் ஆசிரியர்கள் ஆய்வு செய்ததில், பல மாணவர்களின் விடைகள், ஒரே மாதிரியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நடந்த முதல் கட்ட விசாரணையில், மாணவர்கள், தங்கள் நண்பர்களின் வீடுகள் அல்லது வேறு பொதுவான இடங்களில் குழுவாக சேர்ந்து, காப்பி அடித்தது தெரிய வந்துள்ளது. இதில், நடந்தது என்ன என்பது குறித்து, ஒவ்வொரு கல்லுாரியும் விசாரணையை துவங்கியுள்ளது. மேலும், ஒரே மாதிரியாக உள்ள, விடைத்தாள்களை சேகரித்து, அவற்றின் மதிப்பீட்டை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி