மத்திய அரசு எவ்வளவு வற்புறுத்தினாலும் இதை மட்டும் செய்ய மாட்டோம்:அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2020

மத்திய அரசு எவ்வளவு வற்புறுத்தினாலும் இதை மட்டும் செய்ய மாட்டோம்:அமைச்சர் செங்கோட்டையன்3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் மத்திய அரசு இந்த விஷயத்தில் எவ்வளவு வலியுறுத்தினாலும் இதை ஏற்க மாட்டோம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் இன்று சட்டசபையில் விளக்கமளித்தார்


நாடு முழுவதும் 3, 5 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது


மூன்றாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு வைத்தால் மாணவர்கள் அச்சம் கொள்வார்கள் என்றும் அதற்கு மேல் படிக்காமல் படிப்பை நிறுத்தி விட வாய்ப்பு அதிகம் என்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்தனர்


இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார். 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் இதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்


இந்த விஷயத்தில் மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில கொள்கை முடிவில் பின்வாங்க மாட்டோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட கூறியுள்ளார்.

10 comments:

 1. Part time teachers ku help panuga sir

  ReplyDelete
 2. Part time teachers ku help panuga sir

  ReplyDelete
 3. நீங்க இப்படி அவன் இவனு பேசுங்க கொடுப்பாங்க வாங்கிக்கலாம். என்ன சாதனை பண்ணிடீங்க part time teachers தருவான் னு சொல்ற அளவுக்கு

  ReplyDelete
  Replies
  1. Ada arivali tharuvanu soinadhu part time teacher illa Una madhiri part time teachers ku against ah Iruka yevano orutha naga eduacated oru public website la yepadi pesanum nu theriyum naga yena sadhana panom nu yegalukum yega school kum gov ku theriyum yegala yenakum yarum thappa soinadhila gov or gov teacher poi unga velaya parkavum

   Delete
 4. தகுதி இல்லாத உரிய ஆசிரியர் பயிற்சி முடிக்காத போலி பகுதி நேர ஆசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தால் தகுதி உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்..

  மாண்புமிகு அம்மா அரசு போலி பகுதி நேர ஆசிரியர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் சார்

   Delete
  2. Yedhukuda S.A.R unaku indha manaketta polappu ipadi dha orutha part time nu oru name la fake id la yegaluku against ah suthitu irudha room potu yosipayada manageta s.a.r

   Delete
  3. Part time is spy of head, in every office

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி