பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2020

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.



ஈரோட்டில் இன்று அரசு சார்பில் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாள் விழா  நடந்தது. பெரியார், அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு கலெக்டர் கதிரவன் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தபட்டோர் துறை சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கோர்ட் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் கூறியதையடுத்து வருகின்ற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கூடுதல் பள்ளிக்கட்டணம் வசூலிப்பதாக இதுவரை 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்குவது என்பது சாத்தியமில்லை. தமிழகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் மனநிலை மற்றும் கொரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

23 comments:

  1. 2013 ku posting potunga sir wr r waiting

    ReplyDelete
    Replies
    1. விரைவில் பணி நியமனம் செய்யப்படும்....

      Delete
  2. Muttal payale... Thirumpa thirumpa pesinathaiye pesatha da. Neyellam eduthu minister...

    ReplyDelete
  3. இவர் போட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பார்??????

    ReplyDelete
  4. அனைவரும் கவலைப்படாதீர்கள் இவர்களின் ஆட்சி முடிந்த பின்னரே பணி நியமனங்கள் பள்ளி திறப்பு அனைத்தும் நடைபெறும் நிச்சயம் அனைவருக்கும் ஒரு நல்ல எதிர்காலம் பிறக்கும்.

    ReplyDelete
  5. Part time teachers ku help panuga pls

    ReplyDelete
  6. பகல் கனவு காணாமல் நாம் படித்துக்கொண்டே இருப்போம் வருகின்ற தேர்வுக்கு தயாராவோம்

    ReplyDelete
  7. ippo 10 padikiravanga naelama innaa aagum

    ReplyDelete
  8. Only after election bt teacher appointed.

    ReplyDelete
  9. Only after election bt teacher appointed.

    ReplyDelete
  10. 2017 19 tet pass anavangaluku posting poduvangala Ella exam context panuvangala

    ReplyDelete
  11. ஈரோட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம். சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.


    கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை” என்றார்.

    ReplyDelete
    Replies
    1. Part time teacher nu oru posting ah create pani ipadi avaga life ah veenakina ungalukana results 2021 la theriyum

      Delete
  12. Anaithu Arasu alauvalagangalilum thinamum sakaramai anaivarum sulandru nam kadamaiyai seikirom adhanal dhan indha Arasu iyandhiram sumugama seyal padukiradhu anaal araso arasin methana pokai maraika Arasu paniyalargal meedhu oru ketta peyarai uruvakki makalidam Arasu paniyalargal meedhu oru ava peyarinai vara vaithu yedhiriyai pol matri ulladhu anaithilum tharkaligam tharkaligam yedhilum nirandhara thittam ondru illai Nidhi patrakurai yendral 60000 sambalam vagubavaruku 30000 sambalam kuduthuvitu melum oru nirandhara paniyidam 30000 sambalathil uruvakalamey adhai vitu vitu adhey paniku sorpa sambalathil 3000 sambalam valangi tharkaliga paniyidam yendru ondru uruvakki Avargalin valkaiyai nasam seivadhu sariya.idharku andha 3000 sambalathirku paniyil serdhavar medhu thavarillai avarudhu sulnilai kudumba sumai idhan karanamaga paniyil serkindranar samamana velaiku samamana sambalam idhuvey sari idhu yen Thani patta karudhu.nandri.

    ReplyDelete
  13. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினமும் சக்கரமாக அனைவரும் சுழன்று நம் கடமையை செய்கிறோம் அதனால் தான் இந்த அரசு இயந்திரம் சுமுகமாக செயல் படுகிறது ஆனால் அரசோ அரசின் மீதான போக்கை மறைக்க அரசு பணியாளர்கள் மீது ஒரு கேட்ட பெயரை உருவாக்கி மக்களிடம் அரசு பணியாளர்கள் மீது ஒரு அவ பெயரினை வர வைத்து எதிரியை போல் மாற்றி உள்ளது அனைத்திலும் தற்காலிகம் தற்காலிகம் எதிலும் நிரந்தர திட்டம் ஒன்றும் இல்லை நிதி பற்றாக்குறை என்றல் 60000 சம்பளம் வாங்குபவருக்கு 30000 சம்பளம் குடுத்துவிட்டு மேலும் ஒரு நிரந்தர பணியிடம் 30000 சம்பளத்தில் உருவாக்கலாமே அதை விட்டு விட்டு அதே பணிக்கு சொற்ப சம்பளத்தில் 3000 சம்பளம் வழங்கி தற்காலிக பணியிடம் என்று ஒன்று உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்வது சரியா.இதற்கு அந்த 3000 சம்பளத்திற்கு பணியில் சேர்த்தவர் மீது தவறில்லை அவரது சூழ்நிலை குடும்ப சுமை இதன் காரணமாக பணியில் சேர்கின்றனர் சமமான வேலைக்கு சமமான சம்பளம் இதுவேசரி இது என் தனி பட்ட கருத்து.நன்றி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி