அரசு பள்ளி மாணவி ஜே.இ.இ., தேர்வில் வெற்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2020

அரசு பள்ளி மாணவி ஜே.இ.இ., தேர்வில் வெற்றி

ஜே.இ.இ., தேர்வில் திருப்பூரைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்று, அசத்தியுள்ளார். 


என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் இணை நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். திருப்பூர், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த சவுந்தர்யா என்ற மாணவி, 1ம் தேதி நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில், 77.9 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.திருப்பூர் மாவட்ட அளவில், அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி என்ற பெருமையை பெற்று உள்ள சவுந்தர்யா கூறியதாவது:மனப்பாடம் செய்யாமல், கருத்தை உள்வாங்கி படிப்பேன். 


ஜே.இ.இ., தேர்வுக்கென தனியாக பயிற்சி மையத்தில் சேரவில்லை. வகுப்பறையில் படிப்பதோடு சரி; அந்தளவு, ஆசிரியர்களின் கற்பித்தல் இருந்தது.பிளஸ் 2வில், 427 மதிப்பெண் பெற்றேன். ஐ.ஐ.டி., யில் நுழைந்து மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.இவ்வாறு, அவர் கூறினார்.இவரது தந்தை வெள்ளிங்கிரி, கார்பென்டர். அம்மா சரஸ்வதி, இல்லத்தரசி.

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி