தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்

 


பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை நாளை மறுநாள் முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.


அதாவது, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த அனுமதியை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியாக பார்க்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு வேறுபடுவதைப் போலவே, பெற்றோரும் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனால், நாளை மறுநாள் நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு என்பது, ஒத்திவைக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவே முடியும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் உள்ளன என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.

22 comments:

 1. open the school classes 9 to 12 this month

  ReplyDelete
 2. ஆசிரியர் நியமனம் குறித்து ஒரு அறிக்கை விடுங்கள் ஐயா 🙏🙏

  ReplyDelete
  Replies
  1. பணி நியமனங்களில் ஊழல்

   ஆசிரியர் தகுதித் தேர்வில்
   சீனியாரிட்டி அடிப்படையில் பணி

   வழங்கப்படவில்லை

   7 ஆண்டுகளில் காலாவதியாக
   உள்ள தகுதித் தேர்வுச்

   சான்றிதழை ஆயுட்கால
   சான்றிதழாக அறிவிக்க வேண்டும்

   ஊழலையே இலட்சியமாகக்
   கொண்டுள்ள அதிமுக அரசு,

   இந்தக் கோரிக்கைக்கு
   செவிமடுக்கவே இல்லை.
   இதுகுறித்துப் பேரவையில்
   பேசுவதற்கும் அனுமதிக்கவில்லை

   மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

   Delete
  2. இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு மட்டுமே அதிலும் தற்போது படித்து முடித்த இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் வெயிட்டேஜ் என்ற பேரிடியை இறக்கியுள்ளார்கள். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து இதற்காக குழந்தைகளை வைத்துக் கொண்டு கடினமாகப் படித்து உழைத்தவர்களுக்கு இவர்களின் முறையில் எப்படியும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அட்லீஸ்ட் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காகவாவது சீனியாரிட்டியையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டால் குழந்தைகளையும் படிக்கவைத்துக் கொண்டு கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கோரிக்கையை இந்த ஆட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான் உள்ளது. இவர்களின் ஆட்சியில் நீங்கள் நினைப்பதுபோல் YOUNGSTERS-க்கு கிடைத்துக் கொண்டு இருப்பதில்லை. இவர்கள் எப்போதும் பணிநியமன தடைச்சட்டம் கொண்டுவந்து இளைஞர்களையெல்லாம் முதியோர் ஆக்கிவிடுவார்கள். பணிவாய்ப்பு கிடைக்கும் போது பல ஏழைக்குடும்பங்கள் முன்னேறும். ஆனால் இவர்கள் ஆட்சியில் அப்படி அதிகம் நடைபெறுவதில்லை. பணிநியமனம் நடைபெறுவதை உங்கள் அருகில் யாருக்கும் கிடைத்திருந்தால் விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் இவர்களின் பணிநியமனம் தொகுப்பூதிய அடிப்படையில் தான் (அதுவும் வெறும் 7000 ரூபாயில் தான்) நடைபெற்றுள்ளது. இதில் பணிநியமனம் பெற்றவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளார்கள்(மருத்துவத்துறையில் நர்ஸ், காவல்துறை, பகுதிநேர ஆசிரியர்கள் என ஒவ்வொன்றிலும்)

   Delete
 3. Mr.Senkottaitan amachar ana piragu 1 vathu teacher kuda niyammika villai ivar kalvi amachara pottathargu corana warduku amachara poidu irukkalam

  ReplyDelete
 4. நீர் விடுத்த அறிக்கையில் ஒன்று கூட இது வரை செயல்படவில்லை...

  ReplyDelete
  Replies
  1. தி.மு.க இன்று TET க்கு அறிக்கை வெளியிட்டுள்ளது

   Delete
 5. Entha aalu oru dubakoor onnukkum uthavatha uthavakkara onnu months puththi erukkanum ella suya puththi erukkanum athalam ellatha oru thanni kesu

  ReplyDelete
 6. At first open the school first...

  ReplyDelete
 7. First inform when will the schools reopen???

  ReplyDelete
 8. First inform when the schools are reopening. Then we can see about the shift basis:)

  ReplyDelete
 9. அதி புத்திசாலிதனமான முடிவு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி