தமிழ் வழி பள்ளியை மூடக்கூடாது; குஜராத் முதல்வருக்கு இ.பி.எஸ்., கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2020

தமிழ் வழி பள்ளியை மூடக்கூடாது; குஜராத் முதல்வருக்கு இ.பி.எஸ்., கடிதம்

 

குஜராத்தில் உள்ள, தமிழ் வழி பள்ளியை மூடக்கூடாது. அதற்கான செலவை, தமிழக அரசு ஏற்றுக் கொள்ளத் தயார் என, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:

குஜராத் மாநிலம் ஆமதாபாதில், தமிழகத்தைச் சேர்ந்த, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக, தமிழ் வழி பள்ளி நடத்தப்பட்டு வந்தது. மாணவர்கள் வருகை பதிவு குறைந்ததை, காரணம் காட்டி, அப்பள்ளி மூடப்பட்டதை அறிந்து வருத்தம் அடைந்தேன்.

இப்பள்ளி மூடப்பட்டதால், தமிழ் குழந்தைகள், தங்கள் கல்வியை தொடர, வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மிகவும் தொன்மையான மொழி. மிகப்பெரிய வரலாறு மற்றும் கலாசார பெருமை உடையது. குஜராத் மாநில வளர்ச்சிக்கு, தமிழர்கள் பெரிதும் உதவியுள்ளனர். குஜராத்தில் உள்ள, தமிழ் சிறுபான்மையினரின், எதிர்காலம் காக்கப்பட வேண்டும்.

எனவே, நீங்கள் இப்பிரச்னையில் தலையிட்டு, தமிழ் வழி பள்ளி தொடர்ந்து செயல்பட, உத்தரவிட வேண்டும். அப்பள்ளி செயல்படுவதற்கான, முழு செலவையும், தமிழக அரசு ஏற்க தயாராக உள்ளது. தமிழ் மொழி சிறுபான்மையினரின், கல்வி உரிமையை, குஜராத் அரசு பாதுகாக்கும் என, நம்புகிறேன். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி