CBSE - அக்.10-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2020

CBSE - அக்.10-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் முடிவு!

 


12-ம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் அக்.10-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ  பதிலளித்துள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பில் 87,651 மாணவர்கள் மறுதேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கான மறுதேர்வுகள், 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22, 23, 24, 25, 26, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.


இதற்கிடையே அக்.31-ம் தேதிக்குள் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை முடித்துவிட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ஆனால், மறுதேர்வுகளை நடத்தி முடித்து, தேர்வு முடிவுகளை வெளியிடத் தாமதமாகும் என்பதால், மாணவர் சேர்க்கைக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஎஸ்இ விரைவாக மறுதேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இதற்கு இன்று (செப்.24) பதிலளித்த சிபிஎஸ்இ, அக்.10-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், யுஜிசியுடன் இணைந்து மாணவர் சேர்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்தது.

இதனால் மாணவர்களின் கோரிக்கைக்குப் பதில் அளிக்கப்பட்டதாகக் கூறி, உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி