இணைய வழியில் இறுதித்தேர்வை குழுவாக அமர்ந்து எழுதும் மாணவர்கள்! - kalviseithi

Sep 19, 2020

இணைய வழியில் இறுதித்தேர்வை குழுவாக அமர்ந்து எழுதும் மாணவர்கள்!கல்லூரி மாணவர்களுக்கான இணையவழி இறுதி தேர்வினை பழநியில் மாணவர்கள் குழுவாக அமர்ந்து காப்பி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு அறிவித்த செப்டம்பர் மாத கொரோனா ஊரடங்கு தளர்வில் பொது போக்குவரத்து உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. எனினும், பள்ளி, கல்லூரிகள் செயல்படுவதில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அரசால் அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளில் இந்தாண்டு இறுதியாண்டை தவிர, அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தனர். இளங்கலையில் 6வது செமஸ்டர், முதுகலையில் 4வது செமஸ்டர்களுக்கு மட்டும் தேர்வுகள் இணையவழியில் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. தேர்விற்கான கேள்வித்தாள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப், இமெயில் மூலம் அனுப்பப்படும். 


மாணவர்கள் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் முன்னிலையிலோ, பணிபுரிந்து கொண்டிருந்தால் அங்கேயே தனி இடத்தில் அமர்ந்து தேர்வினை எழுத வேண்டுமென்றும், தேர்வுத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் பெற்றோர் கையொப்பமிட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.   இந்த விடைத்தாளை மாணவர்கள் 2 மணிக்குள் அந்தந்த கல்லூரியில் நேரில் அல்லது அருகில் உள்ள கல்லூரிகளிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அனுப்பலாமென அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த விசித்திரமான அறிவிப்பு மாணவர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த மாணவர்கள் அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட இடங்களில் ஒன்றாக அமர்ந்து புத்தகங்களை பார்த்தும், ஒருவரை ஒருவர் பார்த்தும் தேர்வுகளை எழுதினர். பெற்றோர் முன்னிலையில் பார்க்காமல் எழுத வேண்டிய தேர்வை அரசின் விநோத அறிவிப்பால் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பார்த்து எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 comments:

 1. Same as pg computer science exam ana yarum accept pana matriga cctv camera check pana yelam theriyum

  ReplyDelete
 2. Enada ungalukku ithula prachana ithu yheriyaamala avan exam nathuraan

  ReplyDelete
 3. கொரோனா காலத்துல, பசங்க எழுதுறாங்களே...அதைப் பாராட்டுறத விட்டுட்டு....உங்கள மாதிரி ஒரு ஆள் போதும்...

  ReplyDelete
 4. பள்ளி மற்றும் கல்லூரி அக்டோபர் மாதத்தில் திறக்க வேண்டும் முதல்வர் ஐயா

  அப்போது தான் இதற்கு முடிவு வரும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி