ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைகோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைகோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!


ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைகோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.


மாணவர்களை பாதுகாக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சரண்யா , விமல், பரணீஸ்வரன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் இருந்த போது ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.


விதிகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும், மாணவ, மாணவியருக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.


வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நடக்கலாமா வேண்டாமா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி