மாவட்டங்களுக்கிடையில் தொடங்கியது பேருந்து சேவை.! - kalviseithi

Sep 7, 2020

மாவட்டங்களுக்கிடையில் தொடங்கியது பேருந்து சேவை.!

 


பொதுமுடக்கத்தால் மாவட்டங்களுக்கிடையில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளி மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகள் இன்று காலை 5.30 மணி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து வெளிமாவட்டத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


இன்று மட்டும் 400 பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஊர்களுக்கு செல்ல குறைந்த அளவு பயணிகள் மட்டுமே வருவதால் 50 சதவீதம் இருக்கைகள் நிரம்பும் வரை காத்திருந்து பின்னரே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக பல மாதங்களுக்கு பிறகு தொலைதூர பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கி அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கவனமாக பேருந்து இயக்குவது குறித்து பல முன்னெச்சரிக்கை குறிப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, 5 மாதங்களாக இரவு நேரத்தில் ஓய்வில் இருந்ததால், இரவு நேரங்களில் கூடுதல் விழிப்புணர்வோடு பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி