மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2020

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை!


பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 29ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


ஆன்லைன் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும், மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது.


இணைய வழி வகுப்புகளுக்கான வருகைப் பதிவேடு அல்லது மதிப்பெண்களை தனித்தனியாக கணிக்கிடுவது கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். 


அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்றும், வகுப்புகள் கட்டாயம் எனக் கூறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

4 comments:

  1. அம்மா... ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பற்றி ஏதாவது சொல்லுங்க....

    ReplyDelete
  2. Online classes for LKG to V standard are not suitable

    ReplyDelete
  3. பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களயும் தேர்ச்சி என்று அறிவித்து விடலாமே ஏன் அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து ஆயிற்று லட்சக்கணக்கான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று சொன்னவர்கள் ஏன் இந்த ஆயிரக்கணக்கில் உள்ள பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கவில்லை இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மறுபிறவி எடுக்கும் மாணவர்கள் என பாவப்பட்ட மாணவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் ஏன் இவர்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களும் பள்ளிக்கல்வித்துறை திரு ஐயா முதல்வர் அவர்களும் இவர்கள் மீது ஏன் கருணை காட்டக்கூடாது இவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து விடலாமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி