தனியார் ஆசிரியர்களுக்கு சம்பளம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு. - kalviseithi

Sep 1, 2020

தனியார் ஆசிரியர்களுக்கு சம்பளம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.


தனியார் பள்ளி, கல்லுாரிகளில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் நடைமுறையை, அரசு மேற்கொள்ளக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மனுவுக்கு, அரசு பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. திருச்சியைச் சேர்ந்த, கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனு:தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. தனியார் கல்லுாரி ஆசிரியர்களுக்கு, பல்கலை மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு சம்பளம் நிர்ணயிக்கிறது. 


ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், வேறு விதமாக உள்ளது. ஊரடங்கு காலத்தில், தனியார் பள்ளி, கல்லுாரிகளின் ஆசிரியர்கள், சிறிய சிறிய வேலைக்கு செல்கின்றனர். தனியார் பொறியியல் கல்லுாரியில் ஆசிரியராக பணியாற்றியவர், முறுக்கு தயாரித்து, விற்பனை செய்கிறார்.காய்கறி, பூ, இட்லி வியாபாரங்களில் பலர் ஈடுபட்டுள்ளனர். டிரைவர், உணவு டெலிவரி செய்யும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். 


இந்த ஆசிரியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கியிருந்தால், ஓரளவு சேமித்து Gவைத்திருப்பர்.இத்தகைய சூழ்நிலை, அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, எந்த நடைமுறையும் இல்லை. எனவே, தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது, மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பான நடவடிக்கைகளை, அரசே மேற்கொள்ள வேண்டும். தனியார் பள்ளி, கல்லுாரிகளில் நேரடியாக, 'ஆன்லைன்' வழியாக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

9 comments:


 1. ,g;nghOJ ,Uf;ff;$ba Mrphpah;fSf;Fk; ,dpNky; gzpGhpa ,Uf;Fk; Mrphpah;fSf;Fk; ey;y Xh; jPh;g;ig toq;FkhW Mrphpah; rhh;gpy; gzptd;Gld; Nfl;Lf;nfhs;fpNwhk;. ed;wp.

  ReplyDelete
 2. As a disabled private teacher, We are all expecting a good solution from the govt side. It will be useful to the future generation. Thanking you.

  ReplyDelete
 3. Government should take care about Private school staff salary

  ReplyDelete
  Replies
  1. சில‌ நாட்க‌ளுக்கு முன்பு அர‌சு ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் ப‌ணி செய்ய‌வில்லை என‌வே அவ‌ர்க‌ளுக்கு ஊதிய‌ம் வ‌ழ‌ங்க‌க்கூடாது என‌ கூக்குர‌லிட்ட‌ சில‌ கூமுட்டைக‌ள் இத‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்ல‌ போகிறார்க‌ள்...தாங்க‌ள் வேலை செய்யாத‌தால் த‌ங்க‌ளுக்கு ஊதிய‌ம் தேவையில்லை என‌ தார்மீக‌ரீதியில் அர‌சிட‌ம் சொல்ல‌ போகிறார்க‌ளா?..என‌ அறிய‌ மிகுந்த‌ ஆவ‌லுட‌ன் காத்திருக்கின்றேன்..இது அவ‌ர்க‌ளின் அர‌சு ஆசிரிய‌ர்க‌ளின் மீதான‌ காழ்ப்புண‌ர்ச்சியைக் க‌ண்டிக்கும் வித‌மாக‌வும்,சு(கு)ட்டிக் காட்டும் வித‌மாக‌வே பதிவிடுகிறேன்..
   ம‌ற்ற‌ப‌டி த‌னியார் ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ளும் எம் ச‌மூக‌மே..என‌வே வாழ்விழ‌ந்து த‌விக்கும் என் ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ளின் வாழ்வாதார‌த்தைப் பாதுகாக்க‌ அர‌சு உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ க‌னிவுட‌ன் கேட்டுக் கொள்கிறேன்...ந‌ன்றி..

   Delete
  2. Koomuttai, neethanda, vettiya utkarnthuttu 50,000 ,60,000 nnu vangura unakkum ,online class apdiippdinnu velai seiravangalukku 5000 ,6000 sampalam vangravanga aduvum Corona nnu half salary kudukkuranga, athiyam compare panraiyada, Neeyum private la irunduthan vanthirrappa ,as I'm panam parthavudana maranthutta, udanae neethan arivali Madiri pass pannuda nnu solluva ,Enna pandradu, low mark eduthavan kooda velai Ulla poiyran Ida odukkidunnu

   Delete
 4. Government will said proper solution I am very happy.

  ReplyDelete
 5. Government will said proper solution I am very happy.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி