பள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2020

பள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு.



பள்ளிகளில் தனி நபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.


இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன்,  அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட நூல் விநியோகம், விலை இல்லா பொருட்கள் வழங்குதல், மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் விநியோகம்  உள்ளிட்ட பணிகளின்போது தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.


கொரோனா தடுப்பு குறித்து அரசு வெளியிட்டு உள்ள வழிகாட்டு நெறி முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


பள்ளிகளின் நுழைவாயில்களில் சானிடைசர் வைத்து, உள்ளே நுழையும் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 comment:

  1. Special teacher PET drawing tailoring posting podunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி