அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தயார் - தமிழக அரசு - kalviseithi

Sep 9, 2020

அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தயார் - தமிழக அரசு


 கலை அறிவியல் மற்றும் பொறியியல் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது.


இந்த நிலையில் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்தது.


இந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் தமிழக உயர்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.


அப்போது தமிழக அரசு தரப்பில் அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை என்று வெளியான தகவல் தவறானது என aicte யிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும், பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் Aicte திட்டவட்டமாக கூறியுள்ளது.


இதனால் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய தமிழக அரசின் முடிவு திரும்பப்பெறக்கூடும் என்கிற கருத்தை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.


4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி