NHIS ல் கொரோனா சிகிச்சை காப்பீடு...கொரோனா பாதிப்பு சிறப்பு தற்செயல் விடுப்பு ஒரு பார்வை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2020

NHIS ல் கொரோனா சிகிச்சை காப்பீடு...கொரோனா பாதிப்பு சிறப்பு தற்செயல் விடுப்பு ஒரு பார்வை.

கொரோனா கால விழிப்புணர்வு...NHIS ல் கொரோனா சிகிச்சை  காப்பீடு...கொரோனா பாதிப்பு சிறப்பு தற்செயல் விடுப்பு ஒரு பார்வை.


அன்பானவர்களே வணக்கம்.கொரோனா தொற்று அதிகமாக ஏற்பட்டு  வருகின்ற காலகட்டத்தில் உள்ளோம்.முன்பை விட நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்திடுங்கள்.முகக்கவசம்,சானிடைசர் இன்றி வெளியே வராதீர்.ஏடிம் மையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் சானிடைசர் உபயோகியுங்கள்.


ஆங்காங்கே ஆசிரியர் பெருமக்களுக்கும்,அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் ஒன்றிரண்டு தொற்றுகள் ஏற்படும் பொழுது பதற்றமடையாமல் மனஉளைச்சல் ஏற்படாமல் கவனமுடன் கையாளுங்கள்.


🌟NHIS ல் கொரொனா ஒதுக்கீடு


NHIS புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஆசிரியர்/அரசுப் பணியாளர் அல்லது அவர்களின் குடும்பத்தினர்களை  மருத்துவமனையில் சேர்க்கப்படும்பொழுது வெண்டிலேசன் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தினந்தோறும் ₹ 8500 ம்,வெண்டிலேசன் அற்ற சிகிச்சைக்கு தினந்தோறும் ₹ 6500 ம் அரசாணை 280 ன் படி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும் நாட்களுக்கு இவ்வசதியை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளவும்.


🌟கொரோனா நோய்க்கான விடுப்பு.


ஆசிரியர்/அரசு ஊழியர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டால் ஆசிரியர்/அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.இதற்கான மருத்துவ சான்றிதழ் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒதுக்கப்பட்டுள்ள சுகாதார மையத்தால் வழங்கப்படும்.உதாரணம் பரமத்தி ஒன்றியம்-நல்லூர் சுகாதார நிலையம்


சுகாதாரப் பணியாளர்களால் (Health Inspector)சார்புடைய ஆசிரியர்கள் அல்லது அரசு ஊழியர்களுக்கு மருத்துவச் சான்றினை அளிப்பார்.அச்சான்றினை இணைத்து 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பினை சார்புடைய அலுவலருக்கு விண்ணப்பித்து விடுப்பினைப் பெறலாம்.


நலம் பெற நம்பிக்கை விதைத்திடு...பயம் போக்கி பலம் பெறச் செய்திடு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி