10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2020

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு...

 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் இருந்து பெரும்பாலான கேள்விகள் பொதுத்தேர்வு வினாத்தாள்களில் கேட்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை


10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கபடவில்லை. ஆன்லைன் வழியாகவே பாடம் நடத்தப்படும் சூழலில், அரசு சார்பில் கல்வித் தொலைக்காட்சியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் படங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தும் பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் முக்கிய தலைப்புகளை மட்டும் ஆழமாக படிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

5 comments:

  1. How it is possible in my two children at same time but different channel

    ReplyDelete
  2. Last year nera solli kuduthathey exam cansal solluneyga epo TV padicha mattum exam vaikururenga ethum canal all pass podunga

    ReplyDelete
  3. Ethuku ithu schoola solli kuduthave ozhunga padikkamatanga tv solli kudutha padikaporanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி