3 நாட்கள் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் - kalviseithi

Oct 24, 2020

3 நாட்கள் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 


வரும் 28ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26, 27,28 ஆகிய மூன்று நாட்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென் தமிழக மாவட்டங்கள் குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதற்கு காரணம் மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கதேசம் அருகே கரையை கடந்தது.


இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிக அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரை வட தமிழகத்தை பொறுத்த வரை இயல்பை ஒட்டியும், தென் தமிழகத்தில் இயல்புக்கு குறைவாகவும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி