10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம் - kalviseithi

Oct 23, 2020

10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் வருகைப் பதிவேட்டி அடிப்படையில், மாணவர்களுக்குத் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள பள்ளி அல்லது தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தேர்வர்களும் பெற்றோர்களும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 14-ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ்  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தனித்தேர்வு எப்போது நடைபெற்ற தேர்வு க்கு சான்றிதழ் வழங்க படுகிறது என்று சொல்லுங்க சார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி