ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து 23.10.2020-க்குள் அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2020

ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து 23.10.2020-க்குள் அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி சிறப்பு விதிகளின்கீழ் உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.


 இதன்படி இவ்வாசிரியர் சார்ந்த விவரங்களை தயார் செய்யும் பொழுது அவர்களுக்கு நேரடி நியமனம் / பதவி உயர்வு வழங்கப்பட்ட ஆணையின் நகல் , பணிவரன்முறை / தகுதிகாண்பருவம் செய்யப்பட்ட ஆணையின் நகல் மற்றும் அவர்களின் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை நகல்களை பெற்று அவற்றின் அடிப்படையில் அடிப்படையில் சரிபார்த்து படிவத்தினை முழுமையாக ஆங்கிலத்தில் ( Excel format ) பூர்த்தி செய்து 23.10.2020 க்குள் W3 பிரிவு ( w3sec.tndse@nic.in ) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு , அதன் நகலினை முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் , ஆசிரியர்களிமிருந்து பெறப்படும் சான்றிதழ்களின் நகல்களை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும் எனத் அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் , இதில் ஏதும் தவறு ஏற்படின் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி